Webdunia - Bharat's app for daily news and videos

Install App

`தண்ணீரைக் காய்ச்சி குடியுங்கள்'

Webdunia
திங்கள், 6 அக்டோபர் 2008 (12:00 IST)
சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள தொற்றுநோய் தடுப்பு மருத்துவமனையில் 2 பேர் உயிரிழந்தது காலரா நோயால் அல்ல என்று மாநகர மேயர் மா. சுப்பிரமணியன் மறுத்துள்ளார்.

மேலும் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் காலரா பரவாமல் இருப்பதற்கு ஏதுவாக பொதுமக்கள் குடிதண்ணீரை காய்ச்சிக் குடிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

சென்னையில் காலரா நோய் இல்லை என்றும், இதனால் பொதுமக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம் என்றும் அவர் கூறினார்.

முன்னதாக நேற்று தண்டையார்பேட்டை மருத்துவமனைக்குச் சென்ற மா. சுப்பிரமணியன், அங்கு சிகிச்சை பெறுபவர்களிடம் சிகிச்சை பற்றி கேட்டறிந்தார்.

மேலும், சுனாமி குடியிருப்பில் வழங்கப்படும் குடிநீரில் உள்ள குளோரின் அளவு குறித்தும் மேயர் ஆய்வு செய்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடற்பயிற்சி செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய 6 வழிமுறைகள்..!

வைட்டமின் டி குறைபாட்டால் எலும்புகள் பிரச்சனை ஏற்படுமா?

இரவில் தூக்கம் வரவில்லையா? என்னென்ன செய்ய வேண்டும்?

பாம்பு போல நாக்கை வெட்டி டாட்டூ: இதனால் என்ன ஆபத்து?

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் சைனஸ் பிரச்சனை.. தீர்வு என்ன?

Show comments