Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒரு கொசுவர்த்தி சுருள் 100 சிகரெட்டுக்கு சமம்!

ஒரு கொசுவர்த்தி சுருள் 100 சிகரெட்டுக்கு சமம்!
, வியாழன், 22 செப்டம்பர் 2011 (13:47 IST)
கொசுவர்த்தி சுருள் மற்றும் திரவ வடிவிலான மருந்து ஆகியவை உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை என்று மருத்துவ நிபுணர்கள் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தபோதிலும், ஒரு கொசுவர்த்தி சுருளிலிருந்து வரும் புகையை சுவாசிப்பது 100 சிகரெட்டு புகையை சுவாசிப்பதற்கு சமமானது என்று தற்போது நடத்தப்பட்டுள்ள புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

மலேசியாவில் உள்ள இருதய ஆராய்ச்சி அறக்கட்டளை ஒன்று நடத்திய ஆய்விலேயே இந்த அதிர்ச்சியான தகவல் தெரியவந்துள்ளது.

"கொசுவர்த்தி சுருளின் ஆபத்தை மக்களில் ஏராளானமானோர் உணராமலேயே உள்ளனர். ஆனால் இந்த கொசுவர்த்தி சுருளிலிலிருந்து வரும் புகை நுரையீரலை வெகுவாக பாதிக்கிறது. அதாவது ஒரு கொசுவர்த்தி சுருளின் புகை, 100 சிகரெட்டை புகைப்பதினால் ஏற்படும் பாதிப்புக்கு சமமானதாக உள்ளது" என்று அதிர்ச்சி குண்டை வீசுகிறார் இந்த ஆய்வை மேற்கொண்ட மேற்கூறிய ஆய்வு மையத்தின் இயக்குனர் சந்தீப் சால்வி.

" காற்று மாசும் நமது சுகாதாரமும்" என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாநாடு ஒன்றில் கலந்துகொண்டு பேசுகையில் இத்தகவலை தெரிவித்த அவர், மனித உடலில் காற்றினால் வரும் மாசு குறித்த விழிப்புணர்வு மிகவும் குறைவாகவே உள்ளது.

மேலும் இந்திய டாக்டர்களிடையே ஆராய்ச்சி செய்யும் கலாச்சாரம் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது.
அறைக்குள் காணப்படும் காற்று மாசு கூட உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடியதாகவே உள்ளது" என்றும் அவர் தெரிவித்தார்.

காற்று மாசு இந்தியாவில் எந்த அளவுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாக உள்ளதை தலைநகர் டெல்லியை வைத்தே முடிவு செய்துகொள்ளலாம் என்று இந்த மாநாட்டில் தெரிவித்த டாக்டர் ஒருவர், அது தொடர்பான ஆய்வு தகவலையும் தெரிவித்தார்.

டெல்லியில் வசிக்கக் கூடியவர்களில் 55 விழுக்காட்டினர்,பிரதான சாலையிலிருந்து 500 மீட்டர் தொலைவுக்கு உள்ளாகவே வசிக்கின்றனர். இதனால் அவர்கள் பல்வேறு வகையான உடல் நலக்கோளாறுகளை சந்திக்க வேண்டியதுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

சுற்றுச்சூழலுக்கு வாகனங்களால் ஏற்படும் மாசு மிக முக்கிய காரணமாக அமைந்துள்ளது. தற்போது அதிகரித்துவரும் மரபணு குறைபாடுகளுக்கும் காற்று மாசு ஒரு முக்கிய காரணியாக விளங்குகிறது.

இந்தியாவில் ஆண்டொன்றுக்கு சராசரியாக 5 வயதுக்குட்பட்ட 10 லட்சம் குழந்தைகள் சுவாச கோளாறு காரணமாக உயிரிழப்பதாக தெரியவந்துள்ளது.

காற்று மாசுபடுவதற்கு தொழிற்சாலைகளும் ஒரு முக்கிய காரணமாக அமைவதாகவும், எனவே அவற்றை நகருக்கு வெளியே அமைக்க வேண்டும் என்றும் இம்மாநாட்டில் ஆய்வறிக்கை சமர்ப்பித்து பேசிய டாக்டர்கள் தெரிவித்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil