Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயிரியலில் முக்கியக் கண்டுபிடிப்புக்கு நோபல் பரிசு

Webdunia
செவ்வாய், 6 அக்டோபர் 2009 (14:10 IST)
உயிரியலில் இதுவரை புரியாத புதிராக இருந்த ஒரு மூலக் கூறை கண்டுபிடித்ததற்காக அமெரிக்க விஞ்ஞானிகளான எலிசபத் பிளாக்பர்ன், கரோல் கிரெய்டர், ஜேக் ஸோஸ்டாக் ஆகியோருக்கு 2009ஆம் ஆண்டிற்கான மருத்துவ நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

செல்கள் பிரியும் போது அது எவ்வாறு குரோமோசோம்களை முழுவதும் பிரதி எடுக்கிறது என்பது பற்றியும், மேலும் குரோமோசோம்கள் எவ்வாறு அழிவிலிருந்து தற்காத்துக் கொள்கின்றன என்பதையும் இந்த 3 விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உயிரியல் விஞ்ஞானத்தின் புரியாத புதிருக்கு விடை கண்டுள்ளனர்.

FILE
அதாவது குரோமோசோம்களின் முனையில் 'டெலோமியர்ஸ்' ( Telomeres) என்ற ஒன்று குரோமோசோம்களை அழிவிலிருந்து காப்பாற்றுவதாகவும், இந்த டெலோமியர்ஸ் என்பதை டெலோமெரேஸ் ( Telomerase) என்ற சுரப்பி உருவாக்குவதாகவும் இவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

டி.என்.ஏ. உயிரணுக்கள் என்ற நீளமான நூல் போன்ற அமைப்பு மரபணுவை சுமந்து செல்கிறது. இது குரோமோசோம்கள் என்பதனுள் அடைத்து வைத்து பாதுகாக்கிறது. இதன் முனையில் தொப்பி போன்ற ஒன்று உள்ளது இதுதான் டெலோமியர்ஸ் என்பதாகும்.

டெலோமியர்ஸ் என்ற கிரேக்க சொல் டெலோ மற்றும் மெரோஸ் என்பதன் கூட்டு வடிவமாகும். அதாவது டெலோ என்றால் முடிவு, மெரோஸ் என்றால் பகுதி. அதாவது முடிவுப்பகுதி அல்லது முனைப் பகுதி என்ற பொருள் உடையது.

இந்த டெலோமியர்ஸ் இல்லாமல் செல்கள் பிரிகிறது என்று வைத்துக் கொள்வோம். இப்போது என்னவாகும் எனில் குரோமோசோம்களை அது இழந்துவிடும். இதனால் அதில் உள்ள தகவல்களும் அழிந்து போகும்.

FILE
செல்கள் பிரியும் போது குரோமோசோம்களை பிரதியெடுக்கும் சுரப்பிகளும் இதன் டி.என்.ஏ.யும் தொடர்ந்து குரோமோசோம்களின் முனை வரை பிரதியெடுக்க இயலாமல் போய்விடும்.

எலிசபத் பிளாக்பர்ன், குரோமோசோம்களின் முனைகளில் தடுப்புக் காவலனாக இருக்கும் இந்த டெலோமியர்ஸ் என்பதை நம் ஷூ நாடாக்களின் முனையில் உள்ள ஒரு துருத்தி போன்ற அமைப்புடன் ஒப்பிடுகிறார். இதுதான் செல் பிரிவின் போது குரோமோசோம்கள் அழியாமல் காக்கிறது என்றும் இந்த டெலோமியர்ஸை உருவாக்குவது டெலோமெரேஸ் என்ற சுரப்பி என்றும் கண்டுபிடித்துள்ளார்.

FILE
இந்த டெலோமியர்கள்தான் செல்கள் பிரியும் போது அதன் இரட்டை மடங்கு பிரிவை மட்டுப்படுத்துகிறது. இதனால் செல்கள் பிரியும்போது ஏற்படும் இயல்பற்ற தன்மையை டெலோமெரோஸ் கட்டுப்படுத்துகிறது. இயல்பை மீறிய செல்களின் பிரிவினைதான் புற்று நோய்க்கு அடித்தளம் என்பது குறிப்பிடத்தக்கது.

டெலோமியர்ஸ் குறையும் போது செல்களின் வயதாகிவிடுகிறது. மாறாக டெலோமியர்ஸ் நடவடிக்கை அதிகரிக்கப்பட்டு அதன் நீளம் பராமரிக்கப்படும்போது செல்களுக்கு வயதாகும் செயல்பாடு ஒத்திப் போடப்படுகிறது. புற்று நோய் செல்கள் அழிவுறாதவை என்ற கோட்பாடு உண்டு. அதேபோல் மரபுவழியாக வரும் நோய்களை நாம் டெலோமியர்ஸின் குறைபாடாகவே கருதலாம்.

இந்த நோபல் பரிசு விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு செல்களின் அடிப்படை தொழிற்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளது. இதனால் புதிய சிகிச்சை முறைகள் எதிர்காலத்தில் தோன்ற வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளது.

டெலோமியர்கள் குரோமோசோம்களை அழிவிலிருந்து காப்பவை என்பதை 1930ஆம் ஆண்டு ஹெர்மான் முல்லர் என்பவரும், அதன் பிறகு 1983-இல் பார்பாரா மெக்ளின்டோக் என்ற விஞ்ஞானியும் கூறியுள்ளனர்.

ஆனால் டெலோமியர்ஸ் எவ்வாறு உருவாகிறது. இதன் மூலம் செல்கள் பிரிவு எப்படி கட்டுப்படுத்தப்படுகிறது, குரோமோசோம்கள் பாதுகாக்கப்படுகிறது என்பது ஒரு புரியாத புதிராகவே இருந்தது. தற்போது இந்த 3 விஞ்ஞானிகளும் இந்த புதிருக்கு விடை கண்டுபிடித்துள்ளனர்.

விஞ்ஞான சமூகத்தினரிடையே இந்த 3 விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பும் பெரிய வரவேற்பையும் உற்சாகத்தையும் பெற்றுள்ளது. டெலோமியர்கள் குறையும் போது முதுமை ஏற்படுகிறது, அதாவது ஒரு தனி நபரிடத்தில் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த உயிரியும் முதுமை அடைகிறது.

FILE
இயல்பான செல்கள், அதாவது சாதாரண செல்கள் அடிக்கடி பிரிவதில்லை, இதனால் இதன் குரோமோசோம்கள் குறையும் செயல்பாடும் அரிதாகவே உள்ளது. ஆனால் புற்று நோய் செல்கள் அளவற்றும், வரம்பற்றும் பெருகும் தன்மை கொண்டது. ஆனால் அப்படிப் பெருகினாலும் டெலோமியர்களை அவை இழப்பதில்லை. எப்படி இவை செல் முதுமையிலிருந்து தப்பிக்கிறது என்பதுதான் இப்போது கேள்வி.

இதற்கு ஒரு விளக்கம் அளிக்கப்பட்டது. அதாவது டெலோமியர்களின் நடவடிக்கையை புற்று நோய் செல்கள் அதிகரிக்க்றது. எனவே டெலோமியர்களை உற்பத்தி செய்யும் டெலோமெரோஸ் என்ற சுரப்பியை நீக்கிவிட்டால் புற்று நோயிலிருந்து தப்பலாம் என்று கருதப்படுகிறது. இந்தப் பகுதியில்தான் தற்போது ஆய்வுகள் பெருகி வருகின்றன.

சுருக்கமாக இந்த நோபல் பரிசு விஞ்ஞானிகளின் பங்களிப்பு செல் பற்றிய புரிதலில் புதிய பரிமாணங்களை நமக்கு அளித்துள்ளது. இதனால் முதுமை, மரபு வழி நோய்கள், புற்று நோய் உள்ளிட்ட பல நோய்களின் அடிப்படை இயங்கியல் குறித்த ஆய்வில் பெரிய முன்னேற்றம் ஏற்படும். புதிய சிகிச்சை முறைகள் தோன்றும்.

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

சீக்கிரம் கெட்டுப்போகாத ருசி தரும் சாம்பார் பொடி! வீட்டிலேயே செய்வது எப்படி?

ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட என்ன காரணம்?

வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!

கோடைக் காலத்தில் ஏசி போட்டுக் கொண்டு தூங்குவது ஆபத்தா?

Show comments