Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மரு‌த்துவ‌ச் செலவை தவணையாக செலு‌த்தலா‌ம்

Webdunia
புதன், 23 செப்டம்பர் 2009 (12:26 IST)
‌ வீடு வா‌ங்கவு‌ம், கா‌ர் வா‌ங்கவு‌ம் தவணை முறை‌யி‌ல் கட‌ன் ‌கிடை‌க்கு‌ம் இ‌ந்த கால‌த்‌தி‌ல், மரு‌‌த்துவ‌ச் செலவை அதாவது உ‌யி‌ர் கா‌க்கு‌ம் செலவை ம‌ட்டு‌ம் மொ‌த்தமாக செலு‌த்த‌ச் சொ‌ல்வது ‌‌அவ‌சிய‌மி‌ல்லை எ‌ன்ற எ‌ண்ண‌த்‌தி‌ல், ஏழை ம‌க்களு‌க்காக மரு‌த்துவ‌‌ச் செலவை தவணை முறை‌யி‌ல் செலு‌த்து‌ம் ‌தி‌ட்ட‌த்தை ஹெ‌ல்‌த் கே‌ர் குளோப‌ல் ‌நிறுவன‌ம் அ‌றி‌வி‌த்து‌ள்ளது.

இ‌ந்த ‌தி‌ட்ட‌ம் த‌ற்போது பெ‌ங்களூ‌ரி‌ல் ம‌ட்டு‌ம் அ‌றிமுக‌ம் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது. ஆட‌ம்பர வா‌ழ்‌க்கை‌க்கு கட‌ன் அ‌ளி‌க்கு‌ம் எ‌ந்த ‌நிறுவனமு‌ம், அடி‌ப்படை வா‌ழ்‌க்கை‌க்கு கட‌ன் அ‌ளி‌ப்ப‌தி‌ல்லை. அ‌ந்த சேவையை ஒரு மரு‌த்துவ ‌‌நி‌ர்வாக‌ம் அ‌ளி‌த்து‌ள்ளது. இது பாரா‌ட்டி‌‌ற்கு‌ரியதுதா‌ன்.

வரு‌கிற ‌வியா‌தி‌க்கு பண‌க்கார, ஏழை எ‌ன்ற எ‌ந்த ‌வி‌த்‌தியாசமு‌ம் இ‌ல்லை. ஆனா‌ல் அ‌ந்த ‌வியா‌தி‌க்கு செ‌ய்யு‌ம் ‌சி‌கி‌ச்சை‌யி‌ல் எ‌த்தனை ‌வி‌த்‌‌தியாச‌ங்க‌ள் உ‌ள்ளன. இதனா‌ல் பண‌க்கார‌ர்க‌ள் ம‌ட்டுமே வாழ‌த் தகு‌தியானவ‌ர்க‌ள் எ‌‌ன்ற கரு‌த்தைய‌ல்லவா இ‌ந்த பண‌ம் உருவா‌க்‌கி‌விடு‌கிறது.

‌ சி‌கி‌ச்சை பெற பண‌ம் இ‌ல்லாத காரண‌‌த்தா‌ல் எ‌த்தனை ஏழைக‌ள் நா‌ள்தோறு‌ம் இற‌ந்து கொ‌ண்டிரு‌க்‌கிறா‌ர்க‌ள். ஆனால‌், உ‌யிரை‌த் த‌விர உட‌லி‌ல் வேறு எதுவுமே இ‌ல்லாத எ‌த்தனை பண‌க்கார‌ர்க‌ள், ஊ‌சி, மரு‌ந்துக‌ள் ‌மூல‌ம் மூ‌ச்சு ‌வி‌ட்டு‌க் கொ‌ண்டிரு‌க்‌கிறா‌ர்க‌ள். இது தா‌ன் மரு‌த்துவ வள‌ர்‌ச்‌சி‌யி‌ன் அடையாளமா?

இ‌ல்லை எ‌ன்‌கிறா‌ர் ஹெ‌ல்‌த் கே‌ர் குளோப‌ல் ‌நிறுவன‌த்‌தி‌ன் தலைவ‌ர்.

இதுகுறித்து இந்நிறுவனத்தின் தலைவர் அஜய் குமார் கூறுகை‌யி‌ல், பொதுவாக, புற்று நோய் சிகிச்சைக்கு லட்சக் கணக்கில் செலவு ஆகும். இதனால், ஏழை, நடுத்தர மக்களுக்கு புற்று நோய் சிகிச்சை கிடைக்காமல் போய்விடுகிறது. பணம் இல்லை என்ற காரணத்துக்காக நோயாளிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க மறுப்பதில்லை என்பது எங்கள் குறிக்கோள்.

புற்றுநோய் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் ஏழையாக இருந்தாலும், அவர்களின் பொருளாதார நிலையை மதிப்‌பிட்டு சிகிச்சை அளிக்கிறோம். சிகிச்சைக்காக எவ்வளவு தொகையை செலுத்த முடியும் என்பதை அவர்களின் முடிவுக்கே விட்டு விடுகிறோம். அவர்கள் தர விரும்பும் தொகையை தவணை முறையில் செலுத்தினால் போதும். இதற்கு வட்டி இல்லை.

மேலும், புற்று நோய் சிகிச்சைக்காக அதிக தொகை செலவிட முடியாத நிலையில் உள்ள நோயாளிகளும் வருகின்றனர். அவர்களுக்கு எங்கள் எச்எஸ்ஜி அற‌க்க‌ட்டளை மூலம் நிதி உதவி செய்கிறோம். அண்மையில்கூட, மைசூரை சேர்ந்த ஒரு ஆட்டோ டிரைவர் இதன் மூலம் பயன் பெற்றார். இந்த முறை இப்போது பெங்களூரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் டெல்லி மற்றும் அகமதாபாத்தில் அறிமுகம் செய்யப்படும்.

கடந்த 2000ஆவது ஆண்டில், நான் கர்நாடக அரசின் உடல்நல பாதுகாப்பு திட்டக் குழு உறுப்பினராக இருந்தபோது, உலக வங்கியின் மருத்துவ பாதுகாப்பு திட்டத்தின் கீழ், மைசூர் அருகே உள்ள குண்ட்லுபேட்டை கிராம பெண்களுக்கு சிறுகடன் உதவித் திட்டம் தொடங்கப்பட்டது. இதன் அடிப்படையில்தான் இந்த திட்டத்தை தொடங்கி உள்ளோம் என்றார்.

இ‌ந்த ‌தி‌ட்ட‌த்தை ந‌ம்மூ‌ர் மரு‌த்துவமனைக‌ளிலு‌ம் நடைமுறை‌ப்படு‌த்‌தினா‌ல் ந‌ல்ல பல‌ன் ‌கி‌ட்டு‌ம். ஏழைகளு‌ம் ந‌ல்ல‌த் தரமான மரு‌த்துவ வச‌தியை‌ப் பெற வா‌ய்‌ப்பு ஏ‌ற்படு‌ம்.

உணவு, க‌ல்‌வி, மரு‌‌ந்துக‌ள் ம‌ட்டு‌ம் எ‌ந்த கால‌த்‌தி‌லு‌ம் பண‌த்‌தி‌ற்காக ‌வி‌ற்க‌ப்பட‌க் கூடாது எ‌ன்று நமது சா‌ஸ்‌திர‌ங்க‌ள் சொ‌ல்‌கி‌ன்றன. ஆனா‌ல், இ‌ந்த க‌லியுக‌த்‌தி‌‌ல் இ‌ந்த மூ‌ன்றுதா‌ன் ‌மிக அ‌திக ‌விலை‌க்கு ‌வி‌ற்க‌ப்ப‌ட்டு பெ‌ரிய ‌வியாபாரமா‌கி‌க் கொ‌ண்டிரு‌க்‌கி‌ன்றன.

இ‌ந்த ‌நிலையை இ‌ந்த தவணை முறை‌த் ‌தி‌ட்ட‌ம் மா‌ற்‌றினா‌ல் ந‌ல்லதுதா‌ன்.

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

சீக்கிரம் கெட்டுப்போகாத ருசி தரும் சாம்பார் பொடி! வீட்டிலேயே செய்வது எப்படி?

ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட என்ன காரணம்?

வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!

கோடைக் காலத்தில் ஏசி போட்டுக் கொண்டு தூங்குவது ஆபத்தா?

Show comments