Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கா‌ய்க‌றி பா‌ல் குழ‌ம்பு

Webdunia
வெள்ளி, 28 மே 2010 (16:06 IST)
தேவையானவை

உருளைக் கிழங்கு - 2
கேரட் (சிறியது) - 1
காலிஃப்ளவர் துண்டுகள் - 1 கப்
தேங்காய் - அரை மூடி
பிரிஞ்சி இலை, கிராம்பு, ப‌ட்டை - ‌சி‌றிது
தேங்காய் எண்ணெய் - 1 தே‌க்கர‌ண்டி
பெரிய வெங்காயம் - 3
பட்டாணி - 1 கப்
நூல்கோல் - 1
பூண்டு - 6 பல்
பச்சை மிளகாய் - 5
த‌னியா தூ‌ள் - 1/2 தே‌க்கர‌ண்டி
உப்பு - தேவையான அளவு

செ‌ய்யு‌ம் முறை

எ‌ல்லா‌க் கா‌ய்க‌றிகளையு‌ம் நறு‌க்‌கி வை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.

வெங்காயம், பூண்டைத் தோலுரித்து நறுக்கிக் கொள்ளவும்.

தேங்காயைத் துருவி, கெட்டிப் பாலையும், இரண்டாம் பாலையும் தனித் தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.

எல்லாக் காய்களையும், கீறிய பச்சை மிளகாய், மசாலாப் பொருள்களையும், இரண்டாம் தேங்காய்ப் பாலுடன் கலந்து, ஒரு பெரிய பாத்திரத்தில் போ‌ட்டு 15 ‌‌நி‌மிட‌ம் வேக ‌விடவு‌ம்.

வெந்த காய்கறிகளை லேசாக மசித்துக் கொள்ளவும்.

மசித்த காய்கறிகளுடன் கெட்டியான தேங்காய்ப் பால், உப்பு, தேங்காய் எண்ணெய் சேர்த்து, திறந்த பாத்திரத்தில் வைத்து, 5 நிமிடங்கள் வேக ‌விடவு‌ம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடலுக்கு புரதச்சத்து கொடுக்கும் பழங்கள் என்னென்ன?

டாய்லெட்டில் உட்கார்ந்து கொண்டு செல்போன் பார்த்தால் வரும் நோய்.. மருத்துவர்கள் எச்சரிக்கை..!

பித்தப்பை பிரச்சனைகள் – அறிகுறிகள் மற்றும் முக்கிய தகவல்கள்

ஒரு மணி நேரத்துக்கு மேல ஃபோன் பாத்தா கண்ணு காலி..?! - அதிர்ச்சி தகவல்!

அடிக்கடி சூப் சாப்பிட்டால் உடல் எடை குறையுமா? என்னென்ன சூப் சாப்பிடலாம்?

Show comments