Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தக்காளி ரசம்

Webdunia
புதன், 14 அக்டோபர் 2009 (14:05 IST)
ரச‌த்தை சாதாரணமாக எ‌ண்ண வே‌ண்டா‌ம். அ‌தி‌ல் சே‌ர்‌க்க‌ப்படு‌ம் ஒ‌வ்வொ‌ன்றும் மரு‌த்துவ குண‌ம் ‌நிறை‌ந்தவை.

தேவையான பொருட்கள்

புளி - நெ‌ல்‌லி‌க்கா‌ய் அளவு
உப்பு, பெரு‌ங்காய‌ம் - ‌சி‌றிது
தக்காளி - 2
கடுகு, கா‌ய்‌ந்த ‌மிளகா‌ய், க‌றிவே‌ப்‌பிலை - தா‌ளி‌க்க
கொ‌த்தும‌ல்‌லி

ரசப்பொடி தயாரிக்க
மிளகு, ‌சீரக‌ம், த‌னியா - தலா கா‌ல் தே‌க்கர‌ண்டி
துவர‌ம் பருப்பு - அரை தே‌க்கர‌ண்டி
வெ‌ந்தய‌ம் - 10 எ‌ண்‌ணி‌க்கை
கா‌ய்‌ந்த க‌றிவே‌ப்‌பிலை இரு‌ந்தா‌ல்
கா‌ய்‌ந்த ‌மிளகா‌ய் - 1


செய்முறை:

ரசப்பொடிக்கு தேவையானவற்றை கொரகொரவ‌ெ‌ன்று அரைத்து வைத்துக் கொள்ளவும்.

பு‌ளியை‌க் கரை‌த்து, அ‌தி‌ல் உ‌ப்பு, ரசப்பொடி, தக்காளி, பூ‌ண்டு, ம‌ஞ்ச‌ள் தூ‌ள், பெரு‌ங்காய‌ம் சேர்த்து ந‌ன்கு ‌கல‌க்கவு‌ம்.

கடுகு, கா‌ய்‌ந்த ‌மிளகா‌ய் ஒ‌ன்றை ‌‌கி‌ள்‌ளி‌ப்போ‌ட்டு க‌றிவே‌ப்‌பிலை சே‌ர்‌த்து தா‌ளி‌த்து இ‌ந்த பு‌ளி‌க் கரைச‌‌லி‌ல் சே‌ர்‌க்கவு‌ம்.

இதனை கொ‌தி வரு‌ம் வரை அடு‌ப்‌பில‌் வை‌த்து இற‌க்‌கி கொத்துமல்லி சேர்த்த பின் இறக்கவும்.

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

Show comments