Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோதுமை ரவா கேசரி

Webdunia
வெள்ளி, 28 மே 2010 (15:39 IST)
தேவையானவை

கோதுமை ரவை - 1 க‌ப்
வெல்லம் - 1 க‌ப்
நெய் - 75 கிராம்
முந்திரிப்பருப்பு - 15
ஏலக்காய் - 4

செ‌ய்யு‌ம் முறை

கோதுமை ரவையை லேசாக வறுத்தெடுத்துத் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து வேகவையுங்கள்.

அது நன்றாக வெந்ததும் வெல்லத்தைத் தட்டிப் போட்டுக் கிளறிவிடுங்கள்.

தொடர்ந்து வெல்லப்பாகு கெட்டியானதும் சிறிதளவு நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பை அதில் போடுங்கள்.

ஏலக்காயையும் தட்டிப்போட்டு இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு நெய்யை ஊற்றுங்கள்.

தொடர்ந்து கிளறிவிட்டு அந்தக் கலவை கேசரி பக்குவத்திற்கு வந்ததும் அடுப்பிலிருந்து இறக்குங்கள்.

நெய்யில் வறுத்த உலர்ந்த திராட்சையைச் சேர்த்தால் மேலும் சுவையாக இருக்கும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடலுக்கு புரதச்சத்து கொடுக்கும் பழங்கள் என்னென்ன?

டாய்லெட்டில் உட்கார்ந்து கொண்டு செல்போன் பார்த்தால் வரும் நோய்.. மருத்துவர்கள் எச்சரிக்கை..!

பித்தப்பை பிரச்சனைகள் – அறிகுறிகள் மற்றும் முக்கிய தகவல்கள்

ஒரு மணி நேரத்துக்கு மேல ஃபோன் பாத்தா கண்ணு காலி..?! - அதிர்ச்சி தகவல்!

அடிக்கடி சூப் சாப்பிட்டால் உடல் எடை குறையுமா? என்னென்ன சூப் சாப்பிடலாம்?

Show comments