Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாழை இலை கொழுக்கட்டை

Webdunia
செவ்வாய், 3 நவம்பர் 2009 (15:57 IST)
தேவையான பொருட்கள்:

புழுங்கல் அரிசி - 200 கிராம்
சர்க்கரை - 100 கிராம்
துருவிய தேங்காய் - மூடி
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் - 2 பொடி செய்தது
உப்பு - 1 சிட்டிகை
வாழை இலை - சிறிதளவு

செய்முறை:

புழுங்கல் அரிசியை ஊற வைத்து ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாக மை போல கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.

ஒரு ‌கி‌ண்ண‌த்‌தி‌ல் துருவிய தேங்காய், சர்க்கரை, ஏலப்பொடி சேர்த்துக் கலந்து பூரணம் செய்து கொள்ளவும்.

வாணலியில் நெய்யை சூடாக்கி, அரைத்த மாவை அதில் போட்டு இளந்தீயில் வதக்கிக் கொள்ளவும்.

சூடு ஆறினதும் சிறு உருண்டைகளாக்கி, பூரிக்கு இடுவது போல வட்டமாக இட்டுக் கொள்ளவும்.

அதன் நடுவே பூரணத்தை வைத்து மூடவும். வாழை இலையை சிறு துண்டுகளாக்கி ஒவ்வொரு துண்டிலும் மாவை வைத்து இலையை மடக்கி நூலால் கட்டிக் கொள்ளவும்.

எண்ணெய் தடவிய இட்லி தட்டில் இவற்றை அடுக்கி வைத்து ஆவியில் வேகவைக்கவும்.

உடலு‌க்கு ஆரோ‌க்‌கியமான கொழு‌க்க‌ட்டை‌த் தயா‌ர்.

அ‌ரி‌சி மா‌வி‌ற்கு ப‌ச்ச‌ரி‌சியை த‌ண்‌ணீ‌ரி‌ல் அல‌சி கழு‌வி வடி‌த்து அதனை உல‌ர்‌த்‌தி மெ‌ஷ‌ி‌னி‌ல் கொடு‌த்து மாவாக அரை‌த்து‌ம் செ‌ய்யலா‌ம்.

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

சீக்கிரம் கெட்டுப்போகாத ருசி தரும் சாம்பார் பொடி! வீட்டிலேயே செய்வது எப்படி?

ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட என்ன காரணம்?

வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!

கோடைக் காலத்தில் ஏசி போட்டுக் கொண்டு தூங்குவது ஆபத்தா?

Show comments