Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மைதா பால் அல்வா

Webdunia
வெள்ளி, 30 அக்டோபர் 2009 (12:02 IST)
சுவையான மைதாபால் அல்வா செய்து உங்கள் குடும்பத்தினரை அசத்துங்கள்.

தேவையான பொருட்கள்:

மைதா மாவு - 1/2 கிலோ
சர்க்கரை - 1 கிலோ
கேச‌ரி பொடி - 1/4 தே‌க்கர‌ண்டி
உருக்கிய நெய் (அல்லது) டால்டா - 1/2 கப்
ஏலப்பொடி - 1 தே‌க்கர‌ண்டி
முந்திரி - 10 பருப்புகள்
திராட்சை - 10

செய்முறை

மைதா மாவை சிறிது இளக்கமாகப் பிசைந்து, மாவு மூழ்கும் அளவிற்குத் தண்ணீர் ஊற்றி, 15 நிமிடம் ஊற வைக்கவும்.

பிறகு மாவைக் கரைத்து விட்டு, மேலே தெளிந்துள்ள நீரை வடித்து விடவும்.

மீண்டும் அதில் 2 லிட்டர் தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் கழித்து தெளிந்த நீரை வடித்து விடுங்கள்.

திரும்ப அதில் 1 லிட்டர் தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் கழித்து தெளிந்தநீரை வடித்து விட்டால் சுமார் 1 1/2 லிட்டர் மைதா பால் கிடைக்கும்.

ஒரு பாத்திரத்தில் சர்க்கரை போட்டு, தண்ணீர் ஊற்றிக் கொதிக்க வைக்கவும்.

நுரைநுரையாக வரும் சமயத்தில் தீயை மட்டுபடுத்தி மைதா பாலை ஊற்றிக் கிளறவும்.

5 நிமிடம் கழித்து கேச‌ரி பொடி, உருக்கிய நெய் சேர்த்துக் கிளறி கெட்டியான அல்வா பதம் வந்தவுடன், நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்துக் கிளறி இறக்கி விடுங்கள்.

கேழ்வரகு உணவுகளில் இருக்கும் சத்துக்கள் என்னென்ன?

சிகரெட் புகைப்பதால் ஏற்படும் அதிர்ச்சியூட்டும் தீமைகள்..!

இரவில் புரோட்டா சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

சின்ன வெங்காயம் சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதா?

கால்கள் மரத்து போகாமல் இருக்க சரியான உடற்பயிற்சி எவை எவை?

Show comments