Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உருளைக்கிழங்கு ஜிலேபி

Webdunia
புதன், 30 செப்டம்பர் 2009 (13:56 IST)
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு : 1/2 கிலோ
தயிர் : 1 கப்
ஆரோரூட் பவுடர் : 50 கிராம்
எலுமிச்சை : 1
நெய் : 1/2 கிலோ
சர்க்கரை : 1/4 கிலோ
குங்குமம்பூ : 1 சிட்டிகை
வெள்ளைத் துணி

செய்முறை:

உருளைக்கிழங்கை வேக வைத்து, மேல் தோலை உரித்து ஒரு பாத்திரத்தில் போ‌ட்டு, அ‌தி‌ல் ஆரோரூட் பவுடர், தயிர் சேர்த்து கெட்டியாகப் பிசையவும்.

ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, சர்க்கரையை கொட்டி அடுப்பில் வைக்கவும். சர்க்கரை பாகாகக் கொதித்து இருகி வரும்போது குங்குமம்பூவை சிறிது தண்ணீரில் கரைத்து, அதில் ஊற்றி இறக்கவும்.

எலுமிச்சம் பழத்தை பிழிந்து, சாறை தனியாக வைத்துக் கொள்ளவும். வெள்ளைத் துணியின் நடுவில் சிறு துவாரம் போடவு‌ம். வாணலியில் நெய்யை விட்டு அடுப்பில் வைக்கவும்.

நெய் காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ள உருளைக்கிழங்கு கலவையை, துவாரம் செய்துள்ள துணிக்குள் வைத்து, முறுக்கு பிழிவது போல பிழிய வேண்டும். முறுக்கின் இருபுறமும் சிவக்க வெந்து எடுக்கவும்.

அதனை சர்க்கரைப் பாகில் போடவும். ஊறியதும் எடுத்து ஒரு பாத்திரத்தில் போடவும். உருளைக்கிழங்கு ஜிலேபி தயா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எலும்பு மண்டலத்தை வலுவாக்க உதவும் பிரண்டை.. முக்கிய தகவல்கள்..!

உணவு பேக்கிங் செய்யப்படும் கருப்பு பிளாஸ்டிக் பொருட்கள் புற்றுநோயை உருவாக்குமா? அதிர்ச்சி தகவல்..!

Gen Beta குழந்தைகளுக்கு வைக்க சூப்பரான 10 பெயர்கள்! Names for Gen Beta Kids!

நாக்கு புற்று நோயை ஆரம்பத்திலேயே அறிவது எப்படி?

HMPV வைரஸ் சர்க்கரை நோயாளிகளை அதிகம் பாதிக்குமா? அதிர்ச்சி தகவல்

Show comments