பால் பேனி

Webdunia
வெள்ளி, 25 செப்டம்பர் 2009 (15:51 IST)
இது அவசரத்திற்கு உதவும் இனிப்பு பண்டமாகும். வீட்டில் பேனி வாங்கி வைத்திருந்தால் போதும். 15 நிமிடத்தில் பேனி தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்

பால் - 1/2 லிட்டர்
சர்க்கரை - 1 கப்
பேனி - 1 பாக்கெட்
முந்திரி - 10
ஏலக்காய் - 2
திராட்சை - 5
நெய் - கால் கப்

செய்யும் முறை

webdunia photo
WD
ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி கொதிக்க விடவும்.

வாணலியில் நெய் விட்டு முந்திரி, திராட்சையை பொரித்துக் கொள்ளவும். ஏலக்காயை பொடியாக்காவும்.

பால் கொதிக்கும்போது சர்க்கரையை சேர்த்து கரைக்கவும்.

சர்க்கரை கரைந்ததும் பேனியை அப்படியே பாலில் போடவும். ஏலக்காய் பொடியை சேர்க்கவும்.

பேனி பாலில் கரைந்து டால்டா போன்று வரும். அப்போது இறக்கி வறுத்த முந்திரி, திராட்சையை சேர்த்து பரிமாறவும்.

இது சூடாக சாப்பிட ஏற்ற உணவு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திரையரங்குகளில் வாங்கும் பாப்கார்ன் சாப்பிட்டால் இவ்வளவு பிரச்சனையா?

தக்காளியை ஃபிரிட்ஜில் வைத்து சமைத்தல் நல்லதா?!... உண்மையை தெரிஞ்சுக்கோங்க!..

குளிர்கால உடல் பிரச்சனையை போக்கும் கேரட்!.. இவ்வளவு நன்மைகளா!...

நோயை போக்கும் கத்திரிக்காய்!.. இவ்வளவு பலன்களா?!.. வாங்க பார்ப்போம்!...

உலர் பழங்கள் மற்றும் நட்ஸ் வகைகளை நேரடியாக சாப்பிடலாமா? தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடலாமா?

Show comments