முப்பரப்பு லட்டு

Webdunia
திங்கள், 27 ஏப்ரல் 2009 (16:08 IST)
மூன்று பருப்புகளைப் போட்டு செய்யும் இந்த லட்டு சுவையானதும், செய்ய எளிதானதும் கூட

கடலைப் பருப்பு - 1/2 கிலோ
துவரம் பருப்பு - 1/2 கிலோ
பாசிப்பருப்பு - 1/2 கிலோ
தேங்காய்த் துருவல் - 1 கப்
முந்திரி, உலர்ந்த திராட்சை - சிறிதளவு
சர்க்கரை - 1 கிலோ
ஏலக்காய் - 5

செய்முறை

மூன்று பருப்புகளையும் 2 மணி நேரம் தனித்தனியாக ஊற வைக்கவும்.

நன்கு ஊறியதும் தனித்தனியே மிக்சியில் போட்டு ஒன்றும் பாதியுமாக அரைக்கவும்.

வாணலியை அடுப்பில் வைத்து அரைத்த பருப்புகளை தனித்தனியாக வதக்கிக் கொள்ளவும்.

சர்க்கரையை நன்கு பாகு காய்ச்சி அதில் பருப்புகளையும், தேங்காய் துருவல், முந்திரி, ஏலக்காயை ஒன்றன்பின் ஒன்றறாகச் சேர்த்து கிளறவும்.

நன்கு ஆறியதும் லட்டுகளாக உருட்டவும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சத்தமாகச் சிரிப்பதால் கிடைக்கும் மகத்தான நன்மைகள்: நீண்ட ஆயுளுக்கு இதுவே எளிய வழி!

பெண்கள் அவசியம் செய்ய வேண்டிய முக்கிய பரிசோதனைகள்..!

முடி உதிர்தல் பிரச்னையா? முதலில் காரணத்தை தெரிந்துகொண்டு இயற்கையாக தீர்வு காணுங்கள்!

திராட்சைப் பழத்தின் வியக்கவைக்கும் மருத்துவ குணங்களும் உடல்நலப் பயன்களும்

தக்காளி காய்ச்சல் என்றால் என்ன? எந்தவிதமான சிகிச்சை எடுக்க வேண்டும்?

Show comments