Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரியாணி செ‌ய்யு‌ம் போது...

Webdunia
செவ்வாய், 13 செப்டம்பர் 2011 (19:25 IST)
பிரியாணி செ‌ய்யு‌ம் போது...

பிரியாணி தயார் செய்யும் போது நல்ல நிறமாகவு‌ம், உதிரி உதிரியாகவு‌ம ் இருக்க வேண்டுமானால் அதில் சிறிதளவு எலுமிச்சை பழச்சாறு சேர்க்க வேண்டும்.

மளிகை‌ப் பொரு‌ள் தீர்ந்துவிட்டால்...

அடுப்பங்கரை அலமாரியில் ஒரு பேப்பர் பேடும் பேனா ஒன்றும் வைத்துக் கொள்ளுங்கள். அதில் தினமும் தீர்ந்துவிட்ட பொரு‌ட்களை குறித்து வையுங்கள். கடைக்குச் செல்லும்போது இந்த சீட்டை எடுத்துச் சென்று வேண்டியவ‌ற்றை மறந்துவிடாமல் வாங்கி வரலாம். இதனால், கடைகளுக்கு அடிக்கடி ஓடும் விதத்தையும் நேரத்தையும் மிச்சப்படுத்தலாம்.

ரசம் மணமாக இருக்க...

ரசம் தயாரிக்கும் போது சிறிது முருங்கை இலை சேர்த்துக் கொதிக்க வைத்தால் ரசம் மணமாக இருக்கும். முருங்கைக் கீரை சேர்ப்பதால் நல்ல சத்தாகவும் இருக்கம்.

முட்டை கோஸ் சுவை கூட...

முட்டை கோஸ் சமையல் செ‌ய்யும்போது, அதில் சிறிதளவு பால் ஊற்றுங்கள். அதிக சுவையாக இருக்கும். சத்தும் கூடும்.

தேங்காய் துருவும் போது கவனிக்க...

தேங்காய் துருவும்போது ஓ‌ட்டு‌ச் சத்தம் கேட்கும் வரையில் துருவக்கூடாது. தேங்காய் ஓட்டுத்தூள் குடல் புண்களை ஏற்படுத்தும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூலநோய் குணமாக என்னென்ன உணவுகள் சாப்பிட வேண்டும்?

ஆரோக்கியமான உயிரணுக்கள் உருவாக உதவும் மாசி கருவாடு.. ஆச்சரிய தகவல்..!

எம்ஜிஎம் கேன்சர் இன்ஸ்டிடியூட் நடத்திய புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்வு! - 500-க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்பு!

பெண்களுக்கு இரும்புச்சத்து குறைவதால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

உடலில் சர்க்கரை அளவு அதிகரிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

Show comments