Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரு‌சியான ஆ‌ம்லெ‌ட் தயா‌ரி‌க்க...

Webdunia
புதன், 4 மே 2011 (18:09 IST)
ஆம ்ல ெட் தயாரிக்கும்போது அதனுடன் சிறிதளவு பால் மற்றும் உளுத்தம் மாவு சேர்த்தால் ஆம ்ல ெட் மொறுமொறுப்பாகவும் ருசியாகவும் இருக்கும்.

கோதுமை மாவை அரைக்கும்போது சோயாபீன்ஸை அதனுடன் சேர்த்தால் சப்பாத்தி ருசியாக இருப்பதுடன் ஊட்டச் சத்தும் அதிகரிக்கும்.

பாகற்காய், பப்பாளி போன்றவற்றை ஃப்ரிட்ஜில் வைத்தால் மஞ்சளாக மாறிவிடும் இதை தடுக்க அதனை பெரிய துண்டங்களாக நறுக்கி வைக்கலாம்.

ஊறுகாய்களை பாட்டில்களில் அடைக்கும் முன் பாட்டிலில் சிறிதளவு வினீகரை விட்டு நன்றாக குலுக்கினால் பாட்டிலின் உட்சுவர்களில் படியும் வினீகர் ஊறுகாய்களில் பூஞ்சக் காளான் பூப்பதைத் தடுக்கலாம்.

முள்ளங்கி வைத்த பரோட்டா தயாரிக்கும்போது, நறுக்கிய முள்ளங்கியை வறுத்து பிறகு உப்பை சேர்த்தால் முள்ளங்கியில் உள்ள நீர் வற்றாமல் பரோட்டாவை சுருட்ட சுலபமாக இருக்கும்.

பால்கோவா தயாரிக்கும்போது மெலிதான துணியில் 2 ஸ்பூன்கள் கோதுமைமாவை இட்டு இறுகக் கட்டி கொதிக்கும் பாலினுள் வைத்தால், பால்கோவா கிரீம் நிறத்தில் தயாராகும்.

காலிஃப்ளவர் சமைக்கும் போது அதனுடன் ஒரு ஸ்பூன் பாலைச் சேர்த்தால் வெண்மையாக இருக்கும்.

வெஜிடபிள் சூப் ருசியாக இருக்க காய்கறிகளை சிறிதளவு வெண்ணையுடன் சேர்த்து வறுக்கலாம்.

பூரிகள் மொறுமொறுப்பாகவும் பெரிதாகவும் வர மாவுடன் சிறிதளவு ரவாவையும் சக்கரையையும் சேர்க்கவும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏசியில் நீண்ட நேரம் இருந்தால் இளமையிலேயே வயதான தோற்றம் ஏற்படுமா? அதிர்ச்சி தகவல்..!

ஆரோக்கியத்தை கெடுக்கும் இன்றைய பழக்க வழக்கங்கள்.. முக்கிய தகவல்கள்

சிறுநீரில் வெள்ளை நிற நுரை இருந்தால் ஆபத்தா?

குங்குமப்பூ சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா? ஆச்சரியமான தகவல்..!

கம்ப்யூட்டர் முன் அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்கிறீர்களா? இதை கண்டிப்பாக பின்பற்றுங்கள்..!

Show comments