Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாம்பார் குறிப்புகள்

Webdunia
ஞாயிறு, 11 ஜனவரி 2009 (17:09 IST)
சாம்பாரில் முள்ளங்கியை பச்சையாக அறிந்து வேகவைக்காமல் சிறிது எண்ணெய் விட்டு வதக்கி பின்னர் சாம்பாரில் சேர்த்தால் சுவை கூடும். சளியும் பிடிக்காது.

வெங்காய சாம்பார் வைக்கும் போது, வதக்கலுக்கு பெரிய வெங்காயத்தையே பயன்படுத்தவும். சின்ன வெங்காயத்தை சாம்பாருக்கு அரைக்கும் மசாலாவுடன் அரைத்து சேர்க்கவும்.

பெரிய நெல்லிக்காய் சீசன் தற்போது. உடலுக்கு சத்தாணதும் கூட. காய்கறிகள் சேர்த்து வைக்கும் சாம்பாருடன் ஒரு பெரிய நெல்லிக்காயையும் சேர்த்து வைத்துப் பாருங்கள்.

கோடைக் காலம் என்பதால் துவரம் பருப்புடன் சிறிது வெந்தயத்தையும் கழுவி தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊற விடவும். பின்னர் பருப்பை வேகவைத்து நீங்கள் செய்யும் முறையில் சாம்பார் வையுங்கள். வெந்தய சாம்பாருக்கு போட்டி போடுவார்கள்.

சாம்பார் பொடி அரைக்கும் போது அந்த கலவையுடன் சிறிது பொறிக்கடலை, புழுங்கல் அரிசியையும் சேர்த்து வறுத்து அரைத்துக் கொண்டால் சாம்பார் சுவைக்கும்.

கொத்துமல்லி காம்புகளை நல்ல நூலில் கட்டி சாம்பார் கொதிக்கும் போது போட்டு எடுத்து விடுங்கள். நல்ல மணமாக இருக்கும்.

காய்கறி இல்லாத சமயங்களில் வேர்க்கடலையை துவரம் பருப்புடன் வேகவைத்து சாம்பார் வைக்கலாம்.

சாம்பாருடன் செளசெள உள்ளே இருக்கும் கொட்டையை அரைத்து சேர்த்தால் தேங்காய் சேர்த்தது போன்ற சுவையைக் கொடுக்கும்.

துவரம் பருப்பை வேக வைக்கும் போது அத்துடன் சிறிது வெந்தயம் சேர்த்தால் சாம்பார் சீக்கிரம் கெட்டுப் போகாது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எலும்பு மண்டலத்தை வலுவாக்க உதவும் பிரண்டை.. முக்கிய தகவல்கள்..!

உணவு பேக்கிங் செய்யப்படும் கருப்பு பிளாஸ்டிக் பொருட்கள் புற்றுநோயை உருவாக்குமா? அதிர்ச்சி தகவல்..!

Gen Beta குழந்தைகளுக்கு வைக்க சூப்பரான 10 பெயர்கள்! Names for Gen Beta Kids!

நாக்கு புற்று நோயை ஆரம்பத்திலேயே அறிவது எப்படி?

HMPV வைரஸ் சர்க்கரை நோயாளிகளை அதிகம் பாதிக்குமா? அதிர்ச்சி தகவல்

Show comments