சிக்கன் குருமா

Webdunia
ஞாயிறு, 11 ஜனவரி 2009 (16:58 IST)
மட்டன் குருமா கேள்விபட்டிருப்பீர்கள். இது உங்களுக்கான சிக்கன் குருமா.

தேவையான பொருட்கள ்

கோழி - சின்னதாக ஒன்ற ு

இஞ்சி - ஒரு விரல் நீள அளவ ு

பூண்டு - 10 பல ்

வெங்காயம் - 150 கிராம ்

பச்சை மிளகாய் - 10

கொத்தமல்லித் தழை - ஒரு கட்ட ு

எண்ணெய் - 8 தேக்கரண்ட ி

பட்டை - ஒரு துண்ட ு

சீரகம் - இரண்டு தேக்கரண்ட ி

உப்பு - தேவையான அளவ ு

மஞ்சள் தூள் - 2 சிட்டிக ை

தயிர் - 2 தேக்கரண்ட ி


செய்முற ை

1. இஞ்சியையும ், பூண்டையும் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

2. அரைத்த இஞ்ச ி, பூண்டு விழுத ை, தயிருடன் கோழித் துண்டுகளின் மேல் தடவ ி, சுமார் 15 நிமிடம் ஊற வைக்கவும்.

3. வெங்காயம ், பச்சை மிளகாய ், சீரகம ், கொத்தமல்லித் தழையை நன்கு அரைக்கவும்.

4. பாத்திரத்தில் எண்ணெயை விட்டுக் கடுகைப் போடவும். கடுகு வெடித்ததும் பட்டையைப் போடவும். அரைத்த மசாலாவுடன் மஞ்சள் தூளை போட்டு வதங்கவிடவும்.

5. மசாலா தடவிய கோழித் துண்டுகளைப் போட்டு நன்றாக வதக்கவும்.

6. கொஞ்சம் தண்ணீர் சேர்த்து வேக விடவும்.

7. கோழித் துண்டுகள் வெந்த ு, குழம்பு சுண்டி வந்ததும் இறக்கவும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இரவு நேரத்தில் இளநீர் குடிப்பது நல்லதா?!.. வாங்க பார்ப்போம்...

14 - 16 சதவீதம் பேர் மது அருந்துகிறார்கள்!.. இதனால் வரும் நோய்கள் என்னென்ன?!...

40 வயதுக்கு மேல் சோர்வு வர இதுதான் காரணம்!.. ஆய்வில் முக்கிய தகவல்!...

இத செய்யலனா கேன்சர் வரும்!.. எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்!...

தொப்பையை சுலபமாக குறைக்க சில வழிகள்!.. முயற்சி பண்ணி பாருங்க!...

Show comments