Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அ‌ரி‌சி‌க் க‌ஞ்‌சி

Webdunia
திங்கள், 5 ஏப்ரல் 2010 (12:31 IST)
தேவையானவை:

புழுங்கல் அரிசி - 2 க‌ப்
பாசிப்பருப்பு - 1 கை‌ப்‌பிடி
சுக்குப்பொடி - அரை தே‌க்கர‌ண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெறும் கடாயில் புழுங்கல் அரிசியை லேசாக வறுத்து ஆற ‌வி‌ட்டு ‌மி‌க்‌ஸி‌யி‌ல் போ‌ட்டு ரவை போல உடைத்துக் கொள்ளவும்.

பாசிப் பருப்பையும் பொன்னிறமாக வறுக்கவும்.

உடைத்த அரிசியையு‌ம், பருப்பையு‌ம் தேவையான அளவு தண்ணீர் விட்டு குக்கரில் வேக வை‌க்கவு‌ம்.

4 விசில் வந்ததும் இறக்கி‌விடவு‌ம். ச‌ற்று குழை‌ந்து இரு‌க்க வே‌ண்டு‌ம் எ‌னி‌ல் 5 ‌வி‌சி‌ல் வை‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம்.

‌ க‌ஞ்‌சி‌யி‌ல் உப்பு, சுக்குப்பொடி சேர்த்துக் கலந்து குடி‌க்கலா‌ம். இத‌ற்கு இணையாக எலு‌மி‌ச்சை, மா‌ங்கா‌ய் ஊறுகா‌ய்க‌ள் சுவையாக இரு‌க்கு‌ம்.

இ‌ந்த க‌ஞ்‌சி வெ‌யி‌ல் கால‌த்‌தி‌ல் உட‌ல் இழக்கும் நீர்ச்சத்தையும் சக்தியையும் மீட்டுத் தர வல்லது.

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

சீக்கிரம் கெட்டுப்போகாத ருசி தரும் சாம்பார் பொடி! வீட்டிலேயே செய்வது எப்படி?

ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட என்ன காரணம்?

வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!

கோடைக் காலத்தில் ஏசி போட்டுக் கொண்டு தூங்குவது ஆபத்தா?

Show comments