Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அ‌ரி‌சி‌க் க‌ஞ்‌சி

அ‌ரி‌சி‌க் க‌ஞ்‌சி
, திங்கள், 5 ஏப்ரல் 2010 (12:31 IST)
தேவையானவை:

புழுங்கல் அரிசி - 2 க‌ப்
பாசிப்பருப்பு - 1 கை‌ப்‌பிடி
சுக்குப்பொடி - அரை தே‌க்கர‌ண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெறும் கடாயில் புழுங்கல் அரிசியை லேசாக வறுத்து ஆற ‌வி‌ட்டு ‌மி‌க்‌ஸி‌யி‌ல் போ‌ட்டு ரவை போல உடைத்துக் கொள்ளவும்.

பாசிப் பருப்பையும் பொன்னிறமாக வறுக்கவும்.

உடைத்த அரிசியையு‌ம், பருப்பையு‌ம் தேவையான அளவு தண்ணீர் விட்டு குக்கரில் வேக வை‌க்கவு‌ம்.

4 விசில் வந்ததும் இறக்கி‌விடவு‌ம். ச‌ற்று குழை‌ந்து இரு‌க்க வே‌ண்டு‌ம் எ‌னி‌ல் 5 ‌வி‌சி‌ல் வை‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம்.

க‌ஞ்‌சி‌யி‌ல் உப்பு, சுக்குப்பொடி சேர்த்துக் கலந்து குடி‌க்கலா‌ம். இத‌ற்கு இணையாக எலு‌மி‌ச்சை, மா‌ங்கா‌ய் ஊறுகா‌ய்க‌ள் சுவையாக இரு‌க்கு‌ம்.

இ‌ந்த க‌ஞ்‌சி வெ‌யி‌ல் கால‌த்‌தி‌ல் உட‌ல் இழக்கும் நீர்ச்சத்தையும் சக்தியையும் மீட்டுத் தர வல்லது.

Share this Story:

Follow Webdunia tamil