Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கார்ன்பிளாக்ஸ் ‌கி‌ச்சடி

Webdunia
அது எ‌ன்னடா கா‌ர்‌ன்‌பிளா‌க்‌ஸ் ‌கி‌ச்சடி எ‌ன்று யோ‌சி‌க்‌கி‌ன்‌றீ‌ர்களா? ‌சும்மா செ‌ய்து பாரு‌ங்க‌ள்.

தேவையான பொருட்கள் :

கார்ன்ஃப்ளாக்ஸ் - 2 கப்
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
கேரட் - 1 (துருவியது)
முட்டைக்கோஸ் - 1 கப் (பொடியாக நறுக்கியது)
பச்சைப் பட்டாணி - ஒரு கை‌ப்ப‌ி‌டி
இஞ்சி - 1 சிறிய துண்டு
பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கவும்)
கடுகு - 2 தே‌க்கர‌ண்டி
உ. பருப்பு - 2 தே‌க்கர‌ண்டி
க.பரு‌ப்பு - 2 தே‌க்கர‌ண்டி
முந்திரி பருப்பு - 6
மஞ்சள் பொடி - அரை தே‌க்கர‌ண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தாளிப்பதற்குத் தேவையான அளவு

செய்முறை :

கார்ன்ஃப்ளாக்ஸை சூடான வாணலியில் லேசாக வறுத்து எடுக்கவும். பிறகு அதே வாணலியில் எண்ணெய் விட்டு முந்திரிப் பருப்பை வறுத்து எட ு‌ க்கவு‌ம ்.

‌ பி‌ன்ன‌ர ் வாண‌லி‌யி‌ல ் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை‌ப் பரு‌ப்பு போ‌ட்டு தாளித்து விடவும். பிறகு அதில் இஞ்சி, பச்சை மிளகாய், கருவேப்பிலை போடவும்.

பிறகு வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். அத்துடன் எல்லாக் காய்கறிகளையும் போட்டு வதக்கவும். அதில் உப்பு, மஞ்சள் பொடி போட்டு மிதமான தீயில் வேகவைக்கவும். காய்கறிகள் வெந்ததும் கார்ன்ஃப்ளாக்ஸ் போட்டுச் சிறிது வெந்நீர் தெளித்து இரண்டு, மூன்று நிமிடங்கள் மூடிவைத்து வேக ‌விடவு‌ம்.

வாண‌லியை கீழே இறக்கி கா‌‌ர்‌ன்ஃ‌ப்ளா‌க்‌ஸ் உ‌ப்‌பு‌மா ‌மீது முந்திரிப் பருப்பைத் தூவவும்.

இந்த உப்புமாவை தக்காளி சாஸ், சட்னி என எது வேண்டுமானாலும் தொட்டுக் கொண்டு சாப்பிடலாம். கார்ன்ஃப்ளா‌க்ஸைப் பாலில் போட்டு சாப்பிடப் பிடிக்காதவர்களுக்கு இது ஒரு சுவையான, சத்தான மாலை உணவாகு‌ம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நுரையீரலை சுத்தம் செய்யும் உணவுகள் எவை எவை?

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பனங்கிழங்கு.. சீசனில் வாங்கி சாப்பிடுங்கள்..!

சென்னையில் டிஜிட்டல் கண் ஸ்ட்ரெய்ன் நோயாளி உச்சிமாநாடு! - டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை ஏற்பாடு!

உடற்பயிற்சி செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய 6 வழிமுறைகள்..!

வைட்டமின் டி குறைபாட்டால் எலும்புகள் பிரச்சனை ஏற்படுமா?

Show comments