Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதினா துவையல்

Webdunia
ஞாயிறு, 11 ஜனவரி 2009 (15:26 IST)
பு‌தினா துவைய‌ல் எ‌ல்லோ‌ர் ‌வீடுக‌ளிலு‌ம் செ‌ய்வதுதா‌ன். இரு‌ந்தாலு‌ம் தெ‌ரியாதவ‌ர்களு‌க்காக ஒரு முறை நா‌ங்க‌ள் கு‌றி‌ப்பு தரு‌கிறோ‌ம்.

புதினா - 1 கட்டு
தேங்காய் - 3 பத்தைகள்
கடலைப் பருப்பு - 1/4 கப்
உளுந்தப் பருப்பு - 1/4 கப்
புளி
காய்ந்த மிளகாய் - 4
கருவேப்பிலை, கொத்துமல்லி
உப்பு

செ‌ய்முறை

அடுப்பில் வாணலியை வைத்து அதில் எண்ணெய் விட்டு கடலைப் பருப்பு மற்றும் உளுந்தப் பருப்பை போட்டு நன்கு வறுத்துக் கொள்ளவும்.

அதனை தட்டில் கொட்டிக் கொண்டு பின்னர் அதில் நறுக்கி சுத்தம் செய்து வைத்துள்ள புதினா கீரை, கொத்துமல்லி, கருவேப்பிலையை போட்டு வதக்கிக் கொள்ளவும்.

அதையும் தட்டில் வைத்துக் கொண்டு அரைப்பதற்கு ஏற்ற வகையிலான தேங்காயையும் வதக்கிக் கொள்ளவும்.

அதை தட்டில் எடுத்து வைத்துக் கொண்டு, வாணலியில் எண்ணெய் விட்டு 4 மிளகாய்களையும் போட்டு வறுத்துக் கொள்ளவும்.

பின்னர் மிக்சி அல்லது அம்மியில் முதலில் தேங்காயை அரைக்கவும்.

அதில் வறுத்து வைத்திருக்கும் பருப்புகளையும் கொட்டி அரைக்கவும். அதன் பின்னர் புதினா வதக்கல்கள், புளி, உப்பு, கா‌ய்‌ந்த‌மிளகாயை போட்டு அரைத்து எடுக்கவும்.

இதனை சாப்பாடுக்கு துவையலாகவும் பயன்படுத்தலாம்.

தா‌ளி‌த்து வை‌த்து காலை வேளையில் இட்லி, தோசைக்கு சட்னியாகவும் பயன்படுத்தலாம்.

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

சீக்கிரம் கெட்டுப்போகாத ருசி தரும் சாம்பார் பொடி! வீட்டிலேயே செய்வது எப்படி?

ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட என்ன காரணம்?

வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!

கோடைக் காலத்தில் ஏசி போட்டுக் கொண்டு தூங்குவது ஆபத்தா?

Show comments