Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புளியோதரை (புளியஞ்சாதம்)

Webdunia
எண்ணைய் போடாமல் வெறும் சட்டியில் வறுத்துப் பொடி செய் ய

கடலைப் பருப்பு-1 /2 கப ்
கொத்தமல்லி விதை(தனியா)-1 /2 கப ்
மிளகு-1 தேக்கரண்ட ி
சீரகம்-1 டீஸ்பூன ்

இவையெல்லாவற்றையும் தனித்தனியாக ஒரு சூடான சட்டியில் வறுத்துப் பொடி செய்யவும்.

1 /4 கப் எண்ணெயில் வறுத்துப் பொடிக் க

எள்-2 தேக்கண்ட ி
காய்ந்த மிளகாய்-10
பெருங்காயம்-1 டீஸ்பூன ்
வெந்தயம்-1 /2 ஸ்பூன ்

மேற்கண்ட சாமன்களை தனித்தனியாக எண்ணெயில் வறுத்து சேர்த்துப் பொடித்து வைத்துக் கொள்ளவும்.

புளி ஒரு ஆரஞ்சு பழ அளவு (50 கிராம்) அல்லது கூயஅஉட ிn 6 டீஸ்பூன் எடுத்து சிறிது தண்ணீரில் நன்றாகக் கரைத்துக் கொள்ளவும். புளியை ஊற வைத்துக் கரைத்துக் கொள்ள வேண்டும்.

வேர்க்கடலை-2 கப ்
கறிவேப்பிலை-1 கப ்

எண்ணெயில் வறுத்து தனித்தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

நல்லெண்ணெய்-2 கப ்
கடுகு-2 ஸ்பூன ்
காய்ந்த மிளகாய்-10(கிள்ளியது)
மஞ்சள் பொடி-1 ஸ்பூன ்

எண்ணெய் சுட வைத்த ு, கடுகு தாளித்து மஞ்சள் பொட ி, காய்ந்த மிளகாய் கிள்ளிப் போட்ட ு, புளியைக் கரைத்த ு, பொடித்து வைத்த பொடிகளையும் சேர்த்துக் கொதிக்க வைத்து உப்பு சேர்த்து இறக்கி வைத்தால் புளிக்காய்ச்சல் ரெடி.

புளியோதரை தயாரிக்க:

தயார் செய்த சாதத்தைத் தட்டில் கொட்டி பரப்ப ி, உப்ப ு, மஞ்சள் பொடி தூவ ி, நல்லெண்ணெய் 2 ஸ்பூன் சேர்த்துக் கலந்து ஆற வைக்கவும். இப்போது வேர்க்கடல ை, கறிவேப்பிலை இவற்றையும் புளிக்காய்ச்சல் சிறிதையும் கலந்து ஒரு அகலக் கரண்டியால் கலக்கவும். புளிக்காய்ச்சலைக் கொஞ்சம் கொஞ்சமாக தேவையான அளவு கலந்து செய்து பிறகு உப்போ காரமோ சேர்த்துக் கொள்ளலாம். பொடிகளும் மொத்தமாகக் கலக்க வேண்டுமென்பதில்லை. கொஞ்சம் பாட்டிலில் போட்டு வேண்டும் போது தயார் செய்து கொள்ளலாம்.

பிக்னிக் எல்லாவற்றிற்கும் மிகவும் உகந்தது. தொட்டுக் கொள்ள பொறித்த அப்பளம ், வடாம் இவற்றுடன் அவியலுடன ோ, கூட்டுடனோ சேர்த்துச் சாப்பிடலாம்.

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

சீக்கிரம் கெட்டுப்போகாத ருசி தரும் சாம்பார் பொடி! வீட்டிலேயே செய்வது எப்படி?

ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட என்ன காரணம்?

வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!

கோடைக் காலத்தில் ஏசி போட்டுக் கொண்டு தூங்குவது ஆபத்தா?

Show comments