Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாரத்தின் முதல் நாளில் முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சி.. சென்செக்ஸ் 350 புள்ளிகள் உயர்வு..!

Webdunia
திங்கள், 6 நவம்பர் 2023 (09:45 IST)
கடந்த சில நாட்களாக பங்குச் சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதையும் குறிப்பாக கடந்த 10 நாட்களாக பங்கு சந்தை மிகவும் சரிந்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று பங்குச் சந்தை உயர்ந்துள்ளது என்றும் 350 பள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்றுமுன் பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 355 புள்ளிகள் உயர்ந்து 64,718 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது அதே போல்  தேசிய பங்குச் சந்தை நிப்டி 108 புள்ளிகள் உயர்ந்து 19 ஆயிரத்து 339 என்ற புள்ளிகளில்  வர்த்தகமாகி   வருகிறது

வாரத்தின் முதல் நாளே பங்குச்சந்தை உயர்ந்துள்ளதால் இனி வரும் நாட்களில் பங்கு சந்தை உயர அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இருப்பினும் புதிதாக முதலீடு செய்பவர்கள் தகுந்த ஆலோசனை பெற்ற முதலீடு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments