Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாரத்தின் முதல் நாளே சரியும் பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

Siva
திங்கள், 8 ஜூலை 2024 (11:43 IST)
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்றத்தில் இருந்து வருகிறது என்பதும் குறிப்பாக சென்செக்ஸ் வரலாறு காணாத வகையில் 80 ஆயிரத்தை விட அதிகமானது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் கடந்த வாரம் பங்குச்சந்தை நல்ல லாபத்தை கொடுத்த நிலையில் இந்த வாரம் முதல் நாளே பங்குச் சந்தை சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 175 புள்ளிகள் சரிந்து 79 ஆயிரத்து 825 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதே போல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 50 புள்ளிகள் சரிந்து 24, 275 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

இன்றைய பங்குச் சந்தையில் இந்துஸ்தான் லீவர், இண்டஸ் இண்ட்  வங்கி, இன்போசிஸ், ஐடிசி, உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் ஆசியன் பெயிண்ட், ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், ஹெ.சி.எல் டெக்னாலஜி உள்ளிட்ட பங்குகள் சரிந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

வன்னியர்களுக்கு சமூகநீதி வழங்காமல் ஏமாற்ற நினைத்தால்? திமுக அரசுக்கு ராமதாஸ் எச்சரிக்கை

ஆன்லைன் டிரேடிங்கில் ஒரு கோடி ரூபாய் இழப்பு… சென்னை இளைஞர் தற்கொலை!

அடுத்த கட்டுரையில்
Show comments