Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நள்ளிரவே அமலான விலை குறைப்பு: பெட்ரோல் ரூ.100-க்கு கீழ் விற்பனை!

Webdunia
சனி, 14 ஆகஸ்ட் 2021 (08:23 IST)
தமிழக பட்ஜெட் அறிவிப்பில் முதன்முறையாக பெட்ரோல் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு பெட்ரோல் விலை ரூ.100-க்கு கீழ் சென்றுள்ளது. 
 
தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்த நிலையில் நேற்று பட்ஜெட் தாக்கல் நடைபெற்றது. மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பின் நடக்கும் முதல் பட்ஜெட் தாக்கல் இதுவாகும். நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பல்வேறு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை அறிவித்தார். 
 
அந்த வகையில் நேற்று பெட்ரோல் விலையில் ரூ.3 குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் பெட்ரோல் மீதான வரி லிட்டருக்கு ரூ.3 குறைப்பு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இதனால் ரூ.100க்கும் கீழ் குறைந்தது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை. 
 
ஆம், சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் விலை ரூ.3.02 காசு குறைந்து ரூ.99.47 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம், டீசல் விலை 28வது நாளாக மாற்றமின்றி ரூ.94.39-க்கு விற்பனையாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. பாஜக கூட்டணியும் புறக்கணிப்பு..!

சிந்து நதியில் தங்கம் புதைந்து கிடக்கின்றதா? தோண்டி எடுக்க குவியும் மக்களால் பரபரப்பு..!

இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் மீண்டும் மீண்டும் தவறு செய்கிறார்கள்: சீமான்

திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் கைது: போலி ஆதார் அட்டைகள் பறிமுதல்..!

கனடா பிரதமர் பதவி.. பின்வாங்கினார் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட அனிதா இந்திரா!

அடுத்த கட்டுரையில்
Show comments