இந்தியப் பங்குச்சந்தை 3-வது நாளாக சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி!

Mahendran
திங்கள், 28 ஜூலை 2025 (17:18 IST)
மும்பை பங்குச்சந்தை இன்று எதிர்மறையாக தொடங்கிய  சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் மூன்றாவது நாளாக சரிவுடன் முடிவடைந்தன. இதனால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
கோடக் மஹிந்திரா வங்கியில் ஏற்பட்ட கடும் விற்பனையும், இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்த நிச்சயமற்ற தன்மையும் இந்த வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்களாக இருந்தன.
 
இன்றைய வர்த்தக முடிவில், சென்செக்ஸ் 572.07 புள்ளிகள் சரிந்து 80,891.02 ஆகவும், நிஃப்டி 156.10 புள்ளிகள் சரிந்து 24,680.90 ஆகவும் நிலைபெற்றன. ஜூன் 13-க்குப் பிறகு நிஃப்டி 24,700 புள்ளிகளுக்கு கீழே சரிந்தது இதுவே முதல்முறை. பார்மா துறை தவிர, மற்ற அனைத்து துறை குறியீடுகளும் சரிந்தன. ரியாலிட்டி குறியீடு 4%, மீடியா குறியீடு 3%, மற்றும் மூலதனப் பொருட்கள், உலோகம், தொலைத்தொடர்பு, வங்கி குறியீடுகள் 1% முதல் 1.5% வரை சரிந்தன.
 
கோடக் மஹிந்திரா வங்கி (7.31%), விப்ரோ, பஜாஜ் ஃபைனான்ஸ், பார்தி ஏர்டெல், டிசிஎஸ் (பணியாளர்கள் குறைப்பு அறிவிப்பால்) போன்ற பங்குகள் சரிந்தன. இந்துஸ்தான் யூனிலீவர், ஏசியன் பெயிண்ட்ஸ், ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி போன்ற பங்குகள் உயர்ந்தன. 100-க்கும் மேற்பட்ட பங்குகள் 52 வார உச்சத்தை தொட்டதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போலி வாக்காளர்களை நீக்கினால் நிர்மலா சீதாராமனை பாராட்ட தயார்: ஆர்.எஸ். பாரதி..!

மோடி - அமித் ஷா - ஞானேஷ் குமார் கூட்டணியினால் கிடைத்த வெற்றி: பீகார் குறித்து செல்வப்பெருந்தகை

ராகுல் காந்தியின் ‘வாக்குத்திருட்டு’ குற்றச்சாட்டை யாரும் நம்பவில்லை: காங்கிரஸ் பிரமுகர் திடீர் விலகல்..!

உலக வங்கி நிதியை திசை திருப்பி பெற்ற வெற்றி. NDA குறித்து ஜன் சுராஜ் குற்றச்சாட்டு

பீகார் முதலமைச்சர் யார்? அமித்ஷாவுடன் ஜெபி நட்டா தீவிர ஆலோசனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments