Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேற்று தலைகீழாக குறைந்த தங்கம் விலை இன்று மீண்டும் ஏற்றம்.. இன்று ஒரு சவரன் எவ்வளவு?

Siva
வியாழன், 13 பிப்ரவரி 2025 (10:52 IST)
தங்கம் விலை நேற்று மிக மிக பெரிய அளவில் சரிந்த நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று ஒரே நாளில் கிட்டத்தட்ட 1000 ரூபாய் தங்கம் குறைந்ததால் பொது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை தற்போது பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரு கிராம் 40 ரூபாய் உயர்ந்து   7,980 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் 320 ரூபாய் உயர்ந்து விலை ரூபாய்   63,840 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 8,705 எனவும் ஒரு சவரன் ரூபாய் 69,640 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 107.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய்  107,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பெண் ஊழியர்களுக்கு வொர்க் ஃப்ரம் ஹோம் திட்டம்.. ஆந்திர முதல்வர் தகவல்..!

9ஆம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை.. ஆசிரியர் கைது.. டிஸ்மிஸ் நடவடிக்கை..!

சென்னையில் தொழில் முனைவோர்களுக்கு சாட்ஜிபிடி பயிற்சி.. தேதி அறிவிப்பு..!

அமெரிக்கா சென்றடைந்தார் பிரதமர் மோடி.. டொனால்ட் டிரம்புடன் முக்கிய பேச்சுவார்த்தை ..!

மதுரையில் ஆர்ச் வளைவை அகற்றிய போது விபத்து: பொக்லைன் டிரைவர் பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments