Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகா சிவராத்திரி விரதத்தால் கிடைக்கும் நன்மைகள்!

Webdunia
சிவ ராத்திரி அன்று மூன்றாம் காலத்தில் சிவனாரை வழிபட்டால் எப்பேர்பட்ட பாவங்கள் செய்திருந்தாலும் விட்டுவிலகிப் போகும். அதாவது, தன்னால் ஒதுக்கப்பட்ட, தான் ஏற்றுக்கொள்ளாத விஷயங்களைக்கூட சிவபெருமானார் அந்த நேரத்தில்  ஏற்றுக்கொண்டு, மன்னித்து அருள்புரிவாராம். அந்த அளவிற்கு மகத்துவம் மிக்க நேரம் அது.

 
சூரியன் மறையும் வேளையில் சிவராத்திரி பூஜைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
 
முதல் ஜாமம் என்பது (மாலை 6 முதல் 9 மணி வரை).
இரண்டாம் ஜாமம் என்பது (இரவு 9 முதல் 12 மணி வரை).
மூன்றாம் ஜாமம் என்பது (இரவு 12 முதல் அதிகாலை 3 மணி வரை).
நான்காம் ஜாமம் என்பது (அதிகாலை 3 முதல் 6 மணி வரை).
 
மூன்றாம் ஜாம பூஜையில் தேன் அபிஷேகம் செய்ய வேண்டும். அரைத்த பச்சைக் கற்பூரம், ஜாதி முல்லை மலர் சாற்ற  வேண்டும். மூன்று இலைகள் கொண்ட வில்வத்தால் அர்ச்சனை செய்து, எள் சாதம் நைவேத்தியம் செய்து, சாம வேதம்  சொல்ல வேண்டும்.
 
சிவராத்திரி அன்று இரவு முழுவதும் ‘சிவபுராணம்’ உபன்யாசம், ஒரு சில கோயில்களில் நடைபெறுகிறது. அதைக் கேட்கலாம். அமைதியாக சிவ மந்திரங்களை சொல்லி தியானிப்பது நலம் தரும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாமித்தோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதிவில் தைத்திருவிழா.. கொடியேற்றத்துடன் தொடக்கம்..!

இந்த ராசிக்காரர்களுக்கு பயணங்கள் அதிகரிக்கும்! - இன்றைய ராசி பலன்கள் (17.01.2025)!

கிரிவலம் வந்த அண்ணாமலையார்: திருவண்ணாமலையில் வழிநெடுகிலும் பக்தர்கள் தரிசனம்

இந்த ராசிக்காரர்களுக்கு தேவைகள் பூர்த்தியாகும்! - இன்றைய ராசி பலன்கள் (16.01.2025)!

இறைவனுக்கு தேங்காய் உடைப்பது ஏன்? ஆன்மீக பெரியவர்கள் கூறும் காரணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments