Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகா சிவராத்திரியின் போது விரதமிருந்து கண் விழிப்பது ஏன்?

Webdunia
சிவராத்திரி அன்று கண் விழித்திருந்து விரதமிருந்து இறைவனை வணங்கும்போது முழுமையான இறைவன் அருள் கிடைக்கும்.  தியானம் நிலைக்கும். நினைத்த காரியம் நடக்கும்.

 
விரதம் கடைப்பிடிப்போர் முதல்நாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ  சிந்தனையுடன் கண்விழித்திருந்து நான்கு யாம வழிபாடு செய்யவேண்டும். அடுத்தநாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம்  செய்து அடியார்களுடன் உணவருந்தி விரத்தை நிறைவு செய்தல் வேண்டும். சிவராத்திரிக்கு மறுநாள் சிவபுராணம் படித்தோ  அல்லது கேட்டோ, பகல் பொழுதைக் கழிக்க வேண்டும். அதன் பின் உபதேச‌ம் தந்த குருவைப் பூஜை செய்து விட்டு, உடைகள்  மற்றும் உணவினை அந்தணர்க்கு தானமாக அளித்து விரதத்தை நிறைவு செய்யும் விதமாக உணவு உண்ண வேண்டும்.
 
சிவராத்திரி நாளில் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதோர், ஒவ்வொரு ஜாமப் பூஜை முடித்த பிறகும் தண்ணீர், பால்,  பழங்களை உண்ணலாம். சிவராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள்  செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கிப் போகும். இவர்தான் விரதம் இருக்கலாம், இருக்கக் கூடாது என்ற விதியெல்லாம் கிடையாது. யார் வேண்டுமானாலும் சிவராத்திரி விரதத்தை மேற்கொள்ளலாம். 
 
சிவராத்திரியன்று அதிகாலை எழுந்திருந்து காலைக் கடன்களை முடித்து சிறப்பாக வேதம் நான்கினும் மெய்ப் பொருளாவதும்,  நாவினுக்கருங்கலம் ஆனதும், பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை நண்ணி நின்றருப்பதுமான இறைவனின் பஞ்சாட்சர  மந்திரத்தை கூறி பூஜை செய்ய வேண்டும். எதுவும் உண்ணுதல் கூடாது. ஆலயம் சென்று லிங்க மூர்த்தியையும் அம்பாளையும்  தரிசித்து வரலாம். நாள் முழுவதும் இறைவனின் நாமத்தை ஜபித்துக் கொண்டிருக்க வேண்டும். 
 
பிறகு மாலை 6 மணிக்கு மேல் தொடங்கும் இரவில் அபிஷேகப் பிரியரான லிங்க மூர்த்திக்கு நான்கு ஜாமங்களிலும்  அபிஷேகம் செய்து, ஒரு வில்வத்தை அர்ப்பணம் செய்தாலே மூன்று ஜென்ம பாவங்களை அழிக்க வல்லது. மூன்று  தளங்களைக் கொண்ட வில்வத்தைக் கொண்டு முக்கண்ணனான ஸ்ரீ பரமேஸ்வரனுக்கு அர்ச்சனை செய்தால் நல்ல பலன்கள்  பெறலாம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கருங்குளம் வெங்கடாசலபதி கோவில்: குழந்தை வரம் தரும் கடவுள்..!

இந்த ராசிக்காரர்கள் கோபத்தை கட்டுப்படுத்துவது நல்லது! – இன்றைய ராசி பலன்கள்(02.01.2025)!

ஸ்ரீ காளத்தீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் விழா: குவிந்த பக்தர்கள்..!

இந்த ஆண்டின் முதல் நாள் எப்படி இருக்கும்? – இன்றைய ராசி பலன்கள்(01.01.2025)!

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பகல்பத்து உற்சவம்.. இன்று கோலாகல தொடக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments