Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூப்பர் ஸ்டார் ரஜினி பாஜக ’தேர்தல் அறிக்கைக்கு’ ஆதரவா ?

Webdunia
செவ்வாய், 9 ஏப்ரல் 2019 (14:52 IST)
இன்று ரஜினி நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகிவரும்  தர்பார் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்நிலையில் செய்தியாளர்களுக்கு ரஜினி பேட்டி கொடுத்தார். அதில் பாஜகவின் தேர்தல் அறிக்கையில் உள்ள நதிகள் இணைப்பு வரவேற்கத்தக்கது என்று தெரிவித்தார்.
அப்போது அவர் கூறியதாவது :
 
தர்பார் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
 
நதிகள் இணைப்புக்கு தனி அமைச்சகம் என்ப அமையும் என பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
 
பாஜக தலைமையில் கூட்டணி அமைந்தால் நதிகளை இணைக்க வேண்டும்.
 
நதிகள் இணைப்பிற்கு ரஜினி ஆதரவு  தெரிவித்துள்ளார். மேலும் தான் முன்னாள் பிரதமர் வாஜ்பாயிடம் நதிகள் இணைக்குமாறு கூறினேன் அதற்கு  பகீரத் என்று பெயர் வைக்குமாறு சொன்னேன்.அதைச் சிரித்துக் கொண்டே கேட்டார்.
 
நேற்று பாஜக தேர்தல் அறிக்கை வெளியிட்டது அதில் நதிகளை இணைப்போம் என்று தெரிவித்தனர். அப்படி நதிகளை இணைத்தால் நாட்டில் உள்ள வறுமை ஒழியும்: விவசாயிகள் வாழ்வாதாரம் உயரும்.
 
பாஜக அடுத்து ஆட்சிக்கு வருமானால் நிச்சயமாக நதிகள் இணைப்பை முதலில் நிறைவேற்ற வேண்டும்  என்று தெரிவித்தார். 
நதிகள் இணைப்புக்கு தனி அமைச்சகம் என  பாஜக தேர்தல் அறிக்கையில் நதிகள் இணைப்பு குறித்து தெரிவிக்கப்பட்டதற்கு வரவேற்கிறேன்.
 
மேலும் கமலுக்கு உங்கள் ஆதரவு தெரிவிப்பீர்களா என்று கேட்டதற்கு,என்னுடைய ஆதரவை தெரிவித்துவிட்டேன் மீண்டும் கேட்டு எனக்கும் கமலுக்கும் உள்ள நட்பைக் கெடுக்க வேண்டாம் என்று தெரிவித்தார்.
 
மேலும் நிருபர்கள் தேர்தல் குறித்து கேட்டதற்கு, என்னுடைய நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. இது தேர்தல் சமயம் அதனால், சென்ஸ்டிவான விசயங்களை கேட்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்புக்கு 20ல் ஒருவருக்கு பாதிக்கும் அரிய நோய்.. இதயத்திற்கு செல்லும் ரத்தம் திரும்பவில்லை என தகவல்?

அமெரிக்க குழந்தையை தத்தெடுக்க அனுமதி இல்லை.. தம்பதிக்கு நீதிமன்றம் எச்சரிக்கை..!

இந்தி தேசிய மொழி தான் என்பதில் சந்தேகமில்லை.. ஆனால்.. ஜெகந்நாதன் ரெட்டி பரபரப்பு கருத்து..!

மனைவியால் கொடுமைப்படுத்தப்பட்ட கணவனுக்கு விவாகரத்து: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்த நபர் வெட்டி கொலை.. சேலத்தில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments