கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படுமா.? திமுக இன்று 2 ஆம் கட்ட பேச்சுவார்த்தை..!!

Senthil Velan
சனி, 24 பிப்ரவரி 2024 (13:37 IST)
மக்களவைத் தேர்தலையொட்டி கூட்டணி கட்சிகளுடன் இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தையை திமுக இன்று நடத்துகிறது. 
 
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில்,  தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக அதன் கூட்டணி கட்சிகளுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை அண்மையில் நடத்தியது.
 
இந்நிலையில்  2ம் கட்ட பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற உள்ளது. இதற்காக மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளுக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உடனான பேச்சுவார்த்தை மாலை 4:30 மணிக்கும், மதிமுக உடனான பேச்சுவார்த்தை மாலை 5.30 மணிக்கும் நடைபெறுகிறது.
 
இந்த 2ம் கட்ட பேச்சுவார்த்தையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்  கட்சித் தலைவர் காதர் முகைதீன் தலைமையில், மாநில பொதுச் செயலாளர் முகமது அபுபக்கர், மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ ஷாஜகான், தேசிய செயலாளர் அப்துல் பாசித், மாநிலச் செயலாளர் ஆடுதுறை ஷாஜகான் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர்.

ALSO READ: வெங்கடரமண கோயிலில் மாசிமக தேரோட்டம்..! திரளான பக்தர்கள் பங்கேற்பு..!!
 
முதற்கட்ட பேச்சுவார்த்தையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியை திமுகவிடம் கேட்ட நிலையில், இன்று நடைபெறும் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையிலும், அதே தொகுதியை கேட்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நயினார் நாகேந்திரன் - எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தை! அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பா?

வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டால் சமையலறை கருவிகளுடன் தயாராக இருங்கள்: மம்தா பானர்ஜி ஆவேசம்

அப்பாவை மதிக்காதவர் விஜய்!.. காணாம போயிடுவார்... பிடி செல்வகுமார் பேட்டி...

புதிய கட்சி தொடங்கிய ஆதவ் அர்ஜூனாவின் மைத்துனர்.. இலட்சிய ஜனநாயகக் கட்சி என்று பெயர் வைப்பு..!

நான் எப்படி இறந்தேன்? வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாம் தமிழர் வேட்பாளர் கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments