மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி..? பிரேமலதா முக்கிய அப்டேட்..!!

Senthil Velan
செவ்வாய், 19 மார்ச் 2024 (13:08 IST)
மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து வியாழக்கிழமை அறிவிக்கப்படும் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
 
மக்களவை தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி என்பதை இன்னும் தெளிவுபடுத்தவில்லை. பாஜக மற்றும் அதிமுகவுடன் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வந்ததாக கூறப்பட்டது. ஆனால் தேமுதிக கேட்கும் தொகுதிகளை பாஜக, அதிமுக கொடுக்க முன் வராததால் இன்னும் கூட்டணி இழுபறி தொடர்கிறது.
 
இதற்கிடையே அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி வைக்கும் என்று சொல்லப்படுகிறது. இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றாலும் அதிகாரப்பூர்வமாக அதிமுக கூட்டணியில் தேமுதிக இணையவில்லை. 

ALSO READ: திமுக கூட்டணிக்கு பெருகும் ஆதரவு..! அதிமுகவை கழட்டிவிட்ட மஜக..!!
 
இந்த நிலையில் மக்களவைத் தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி என்பது குறித்து வியாழக்கிழமை அறிவிக்கப்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். எத்தனை தொகுதிகளில் தேமுதிக போட்டியிடும் என்பது குறித்தும் அன்றைய தினமே அறிவிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் பொதுக்கூட்டத்துக்கு துப்பாக்கியுடன் வந்தவர் விடுவிப்பு: என்ன காரணம்?

பாராளுமன்ற கூட்டத்தொடரின் நடுவே ராகுல் காந்தி ஜெர்மனி பயணம்: வெளிநாட்டு நாயகன் என பாஜக விமர்சனம்..!

மட்டன் பிரியாணி, வஞ்சிர மீன்.. அ.தி.மு.க. பொதுக்குழுவில் அசத்தும் விருந்து!

நயினார் நாகேந்திரன் எந்த தொகுதியில் நின்றாலும் டெபாசிட் இழக்க வைக்க செய்வோம்: செங்கோட்டையன் சவால்

2 நாள் சரிவுக்கு பின் இந்திய பங்குச்சந்தை ஏற்றம்.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments