Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவகங்கையில் காங்கிரஸ் வேட்பாளரை அறிவிக்காதது ஏன்? கசிந்த முக்கிய காரணம்!!!

Webdunia
சனி, 23 மார்ச் 2019 (10:10 IST)
சிவகங்கையில் காங்கிரஸ் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பாடாததற்கு முக்கிய காரணம் தற்போது வெளியாகியுள்ளது.
 
நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க வியூகம் அமைத்து வரும் காங்கிரஸ் கட்சி இம்முறை எப்படியும் ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்ற குறிக்கோளுடன் பணியாற்றி வருகிறது. தமிழகத்தில் திமுக தலைமையில் காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, மதிமுக, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளும் அதிமுக தலைமையில் பாமக, பாஜக, மற்றும் தேமுதிக ஆகியக் கட்சிகளும் கூட்டணி அமைத்துள்ளன.
 
இதில் எல்லா கட்சிகளும் தங்களின் வேட்பாளர்களை அறிவித்திருந்த நிலையில் காங்கிரஸ் மட்டும் தங்களின் வேட்பாளர் பட்டியலை அறிவிக்காமல் இருந்தது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி நேற்று நள்ளிரவில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
 
அதன் விவரம் கீழ்வருமாறு
 
* திருச்சி- எஸ் திருநாவுக்கரசு
* தேனி- ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
* கரூர்- ஜோதிமணி
* திருவள்ளூர் - ஜெயக்குமார்
* கன்னியாகுமரி - எச்.வசந்தகுமார்
* கிருஷ்ணகிரி- செல்லகுமார்
* ஆரணி- விஷ்ணுபிரசாத்
* விருதுநகர்- மாணிக்கம் தாகூர்
* புதுவை - வைத்தியலிங்கம்
 
ஆனால் இதில் சிவகங்கை வேட்பாளர் பெயர் மட்டும் அறிவிக்கப்படாமல் உள்ளது. இதன் பின்னணியில் உள்ள காரணம் தற்போது வெளியாகியுள்ளது.
 
சிவகங்கையில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் பா.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை நிறுத்த முயற்சித்ததாகவும் ஆனால் அவர் மீதான வழக்குகள் நிலுவையில் உள்ளதால் கட்சி மேலிடம் அவரை நிறுத்த தயங்குவதாகவும் கூறப்படுகிறது. ஆகவே சிவகங்கையில் தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி களமிறங்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

தமிழகத்தில் கூடுதல் விமானங்களை இயக்குகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முழு விவரங்கள்..!

தவெக மாநாட்டுக்கு இடம் கொடுத்தவர்களுக்கு மரியாதை.. பொறுப்பாளர்களுக்கு தங்க மோதிரம்..!

கூட்டணியில் மட்டுமே பங்கு.. ஆட்சியில் எப்போதும் பங்கு கிடையாது: அமைச்சர் ஐ. பெரியசாமி

ராகுல் காந்தியை விட அதிக வாக்குகள் பெற்ற பிரியங்கா காந்தி. வயநாடு தொகுதி நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments