Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனிமொழி, தமிழிசை சொத்து மதிப்பு வெளியானது

Webdunia
வெள்ளி, 29 மார்ச் 2019 (08:29 IST)
தமிழகத்தில் 40 மக்களவைத் தொகுதிக்கும் தேர்தல் வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி நடக்கிறது. இதில் தூத்துக்குடி தொகுதி மிக முக்கியமான விஐபி தொகுதியாக பார்க்கப்படுகிறது.
ஏனெனில் மறைந்த முன்னாள் முதல்வர்  கருணாநிதியின் மகள் கனிமொழியும் , காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனின் மகள் தமிழிசையும் போட்டியிடுகிறார்கள். இருவரும் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்த நிலையில் வேட்பு மனு பரிசீலனையும்  முடிந்து விட்டது. இந்நிலையில் இருவரது சொத்து மதிப்புகளும் தற்போது வெளியாகியுள்ளது.
 
திமுக வேட்பாளர் கனிமொழி தாக்கல் செய்துள்ள சொத்து குறித்த பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: ரூ.21 கோடியே 16 லட்சத்து 57 ஆயிரத்து 370 மதிப்புள்ள அசையும் சொத்துகள் உள்ளன. ரூ.8 கோடியே 92 லட்சத்து 20 ஆயிரத்து 200 மதிப்புள்ள அசையா சொத்துகள் உள்ளன. 
 
கனிமொழிக்கு, வங்கிகளில் ரூ.1 கோடியே 92 லட்சத்து 90 ஆயிரத்து 928 ரூபாய் கடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். கனிமொழி, தனது தாய் ராஜாத்தி அம்மாள் பெயரில் ரூ.1கோடியே 27 இலட்சத்து 48 ஆயிரத்து 413 மதிப்பில் சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
 
தமிழிசை சவுந்தரராஜன் தாக்கல் செய்துள்ள சொத்து  விவரத்தில் தனக்குஅசையும் சொத்துக்கள் என்ற வகையில், ரூ.1 கோடியே 50 லட்சத்து 7 ஆயிரத்து 600 மதிப்புள்ள சொத்துக்களும், அசையா சொத்துக்கள் என்ற வகையில் ரூ.50 லட்சம் மதிப்பிலும் இருப்பதாக கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments