Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமாவளவனை தலைவராக்கியதே நான் தான் – ராமதாஸ் பேச்சு !

Webdunia
புதன், 27 மார்ச் 2019 (15:35 IST)
திருமாவளவனை ஒரு அரசியல் தலைவராக்கியதே நான் தான் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

அதிமுக அரசைக் கடுமையாக விமர்சித்த பாமக அதனுடனேயேக் கூட்டணி வைத்தது கடுமையான விமர்சனங்களை உருவாக்கியுள்ளது. அதிமுக கூட்டணியில் ஏழு மக்களவை தொகுதிகளை பெற்ற பாமகவின் ராமதாஸ் தற்போது தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். விசிக தலைவர் திருமாவளவன் போட்டியிடும் சிதம்பரத்தில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பேசியதாவது.

இதையடுத்து வாக்கு சேகரித்துப் பேசிய அவர் ‘தைலாபுரம் தோட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலையை வைத்து அதை திருமா வளவனைத் திறக்க வைத்தேன். சமுதாயத்திற்கு பயன்படுவார் என்றெண்ணி, மதுரையில் இருந்த அவரை இங்கே கொண்டு வந்து அறிமுகம் செய்தேன். அவரை இன்று ஊடகங்கள் இன்று ஒரு தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளன என்றால் அதற்குக் காரணம் நான்தான். அது என்னுடைய தவறுதான்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.. சென்னை மாநகராட்சி ஆணையர் முக்கிய தகவல்..!

புயல் நகரும் வேகம் அதிகரிப்பு.. சென்னையில் மெட்ரோ ரயில்கள், பேருந்துகள் இயங்குமா?

மீண்டும் பார்க்கிங் களமாக மாறிய வேளச்சேரி மேம்பாலம்.. சென்னை மக்கள் மீண்டும் உஷார்..!

இன்று மதியம் கரையை கடக்கும் ஃபெஞ்சல் புயல் - மக்கள் கவனத்திற்கு சில முக்கிய விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments