Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் தேர்வு ரத்து… ஆனால் – காங்கிரஸ் குழப்பமான தேர்தல் அறிக்கை !

Webdunia
செவ்வாய், 2 ஏப்ரல் 2019 (15:32 IST)
இன்று வெளியாகியுள்ள காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவப் படிப்பிற்கு சேர விரும்பும் மாணவர்கள் நீட் எனும் தேர்வு முறையை அறிமுகப்படுத்தியது மத்திய அரசு. இதனால் கிராமப்புற மற்றும் அரசுப் பள்ளி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கவேண்டும் என தமிழகம் முழுவதும் கோரிக்கை எழுந்தது. ஆனால் மத்திய அரசு இதனை ஏற்கவில்லை.

கடந்த ஆண்டு நீட் தேர்வினால் மருத்துவப்படிப்பிற்கான சீட்டை இழந்த அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டது மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. அதையொட்டி தமிழகம் முழுவதும் நீட்டிற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன. ஆனால் இதுவரை மத்திய அரசு செவி சாய்க்கவில்லை.

அதையடுத்து இன்று காங்கிரஸ் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என அறிவித்துள்ளது. நீட் தேர்வு மூலம் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் மாநில அரசின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. எனவே நீட் ரத்து செய்யப்பட்டு, அதற்கு இணையாக மாநில அளவில் ஒரு தேர்வு நடத்தப்படும்’ என அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில அளவிலான நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் இடையே குழப்பம் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவபெருமான் நெற்றிக்கண்ணை திறந்துவிட்டார்.. திருவண்ணாமலை நிலச்சரிவு குறித்து சித்தர்..!

ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில்.. ரெய்டு சென்ற போலீஸ் அதிகாரி படுகாயம்..!

இளைஞரின் செல்போனை திருடிய குரங்கு.. கால் அட்டெண்ட் செய்து பேசியதா?

இன்று இரவுக்குள் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! - வானிலை அலெர்ட்!

வங்கி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கு: பெண் தொழிலதிபருக்கு மரண தண்டனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments