அச்சச்சோ... அது சும்மா... வெறும் உல்லுலாய்... சமாளித்த எச்.ராஜா!!!

Webdunia
வியாழன், 21 மார்ச் 2019 (11:35 IST)
பாஜக வேட்பாளர்கள் பட்டியலை தன்னிச்சையாக வெளியிட்ட ஹெச்.ராஜா அது வெறும் உத்தேச பட்டியல் என கூறி சமாளித்திருக்கிறார்.
 
அதிமுக கூட்டணியில் தூத்துகுடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், கோவை மற்றும் சிவகங்கை என ஐந்து தொகுதிகளை பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் பட்டியல் இன்னும் வெளியாகவில்லை.
 
ஆனால் அதற்குள் நேற்று பாஜக தேசிய செயலாளர் ஹெ.ராஜா வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். அதன்படி தூத்துக்குடியில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை, கன்னியாகுமரியில் பொன். ராதாகிருஷ்ணன், சிவகங்கையில் எச்.ராஜா, கோவையில் சிபி. ராதாகிருஷ்ணன், ராமநாதபுரத்தில் நயினார் நாகேந்தரன் ஆகியோர் போட்டியிடுகிறார் என்று கூறினார்.
 
முறையாக கட்சி தலைமை அறிவிப்பதற்குள்ளேயே ஹெச்.ராஜா இப்படி கூறியது பாஜக தலைமையை கடும் கோபத்திற்கு ஆளாக்கியது. பாஜகவை சேர்ந்த சிலரே ராஜா மீது விமர்சனங்களை முன் வைத்தனர்.
 
இந்நிலையில் ஹெச்.ராஜா நேற்று நான் வெளியிட்டது வெறும் யூகங்களின் அடிப்படையிலான பட்டியலே. வேட்பாளர்கள் பட்டியலை முறைப்படி கட்சி மேலிடம் அறிவிக்கும் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் எம்.எல்.ஏ ஆன ஈசியா என்னை பாக்கலாம்!. கஷ்டமா இருக்காது!.. விஜய் கொடுத்த நம்பிக்கை

வீட்டு முன்னாடி விசிலை கோலமா போடுங்க!.. வேறலெவலில் பிரச்சாரம் பண்ணும் விஜய்!..

ஒவ்வொரு வீட்டுக்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசம்!. தவெக தேர்தல் அறிக்கை!..

ரூ.2222 கோடி போச்சே!.. ஈரான் போரில் கண்காணிப்பு ட்ரோனை இழந்த அமெரிக்கா!..

14 லட்சம் ரூபாய் டிக்கெட் கொண்ட Palace on Wheels சொகுசு ரயில் ரத்து.. சுற்றுலா துறைக்கு பெரும் பாதிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments