Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மன நலத்தைப் பாதுகாப்போம்!- சினோஜ் கட்டுரைகள்

Webdunia
சனி, 12 நவம்பர் 2022 (23:05 IST)
இன்றைய காலத்தில் மன நலம் என்பது மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. மன நலம் சீராக இல்லையென்றால், உடல் நலமும், வீடும், சமூகமும் எப்படி நலமாக இயங்கும்?

இப்போதெல்லாம், தேர்வு, காதல்,  போதைப் பழக்கம்,ஆன்லைன் விளையாட்டு, உள்ளிட்டவற்றிற்கு அறிமுகமாகிப் பின், அதற்கு அடிமையாகின்றபோது, பண நெருக்கடி, மன உளைச்சல், நினைத்தது கிடைக்காமை, இருக்கிற பணம் பறிபோதல், போன்றவ இக்கட்டுகளுக்கு உள்ளாகித் தேவையில்லாமல் வாழ்க்கையைக் கெடுத்துக் கொள்கிறார்கள்.

எதையும் எதிர்கொள்ளும் பக்குவத்தை வளர்க்க எல்லோரலும் முடியாது; ஆனால், இதற்கான முயற்சிகளில் நம்மாம் ஈடுபடமுடியும், அந்தப்பக்குவத்தன்மையைப் பெறுவதற்கான பயிற்சிகளில் ஈடுபடலாம்.

பேராசான் வள்ளுவர் தன் 458 அது குறளில், ''மன நலம்  நன் குடையர ராயினுஞ் சான்றோர்க்கு இன நலம்  ஏமாப் புடைத்து'' என்று எழுதியுள்ளார்.

அதாவது,  மன நலம் நங்கு அமைந்திருந்தாலும்,  நல்ல குணமுடையவர்க்கு இன நலம் பாதுகாப்பாக இருக்குமென்று கூறியுள்ளார்.

ஆக மன நலம் எல்லாவற்றிக்கும் அடிப்படையானதொன்றாக அமைந்துள்ளது. சமீபத்தில்,  சென்னை – அயனாவரத்தில் உள்ள கீழ்ப்பாக்கம் மன நல காப்பகத்தில் சிகிச்சைபெற்று வந்த  மகேந்திரன்(42) – தீபா(36) இருவரும் ஒருவர் மீது ஒருவர் காதலில் விழுந்து மனதைப் பறிகொடுத்து, சமீபத்தில் வாழ்க்கையிலும்  ஒன்றாய் இணைந்திருக்கிறார்கள். எழுத்தாளர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் இவர்களின் திருமணத்தில் கலந்துகொண்டு இவர்களை வாழ்த்தினர்.

இத்திருமணத்தில் இவர்களுக்குக் கிடைத்த பரிசு என்னவென்றால், அந்த மருத்துவமனையிலேயே இருவரும் பணியாற்றவும்  ஆணை வழங்கப்பட்டதாக அமைச்சர் சுப்பிரமணியம் அறிவித்தார்.

இந்தத் தம்பதியர் இருவருமே முதுகலை பட்டம் பயின்றவர்கள். இருவருக்குமான ஒரு பொதுவான நோய் அதிகம் கோபப்படுதல்…அது சிகிச்சையின் போது தீர்க்கப்பட்டு இயல்பு நிலைக்கு வந்து இன்று புதுவசந்த வாழ்க்கையில் இணைந்துள்ளனர்.

அஹிம்சையே உருவான இயேசுவுக்கும் கூட, தேவாலயத்தை வணிகத்தலமாக மாறியிருந்ததைப் பார்த்ததைக் கண்டு அங்ககிருந்த வியாபாரிகளை சாட்டையால் துரத்தினார். அது தூய்மைப்படுத்துதலுக்கான நிகழ்வு என்று கூறப்படுகிறது.

ஒரு விஷயம் தவறு என்று தெரிந்து அதைப் பொறுத்துக்கொண்டுபோவது நாமே அந்தத் தவற்றை ஒப்புக்கொள்வதற்கும் உடன்படுவதற்கும் சமமாகும். ஆனால், எதற்கெடுத்தாலும், உடல் நலத்திற்கு ஒவ்வாதபடி, அடிப்பில் எரியும் கொள்ளிக்கட்டை மாதிரி அடுத்தவர்கள் எரிந்து விழுவதும், கொதிக்கும்  நீரைக் காலில் ஊற்றுவது மாதிரி விதண்டவாதமாகவே பேசிக் கொண்டிருந்தால் எல்லோருக்குமே பாதிப்புதான்.

ஒரு அலுவலகத்தில் வரவேற்பறையில் வரவேற்பாளராக இருப்பவர் பூவைப் போன்று சிரித்து, வரும் வாடிக்கையாளர்களை வரவேற்று அவர்களுக்கு வழிகாட்டுவார். இதேபோல்,  ஒவ்வொரு நாளும் நாம் வாழ்வைப் புன்னகையோடு எதிர்கொண்டு, வரும் பிரச்சனைகளையும், நேர்மறைக்கண்ணோட்டத்தோடு, அணுகும்போதுத்தான் நமக்கான வாய்ப்புகள் சூரியனைப்போல் பிரகாசத்துடன் வரும்.

அதற்கு நாம் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும்! அதற்கு முதலாவது நம் மன நலத்தைப் பாதுகாக்க வேண்டும்!

                                                                                                                                               தொடரும்...
 #சினோஜ்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வைட்டமின் டி குறைபாட்டால் எலும்புகள் பிரச்சனை ஏற்படுமா?

இரவில் தூக்கம் வரவில்லையா? என்னென்ன செய்ய வேண்டும்?

பாம்பு போல நாக்கை வெட்டி டாட்டூ: இதனால் என்ன ஆபத்து?

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் சைனஸ் பிரச்சனை.. தீர்வு என்ன?

பாராசிட்டமால் மாத்திரையை அடிக்கடி சாப்பிடுவதால் இவ்வளவு பிரச்சனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments