#சும்மாகிழி தர்பாராக வந்திறங்கிய தலைவர்! - மாஸ் அப்டேட் இதோ!

Webdunia
செவ்வாய், 26 நவம்பர் 2019 (17:43 IST)
ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் தர்பார். இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.
ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் இப்படத்திற்கு  சந்தோஷ் சிவன் ஒளிப்பதிபதிவு செய்கிறார்.  கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தர்பார் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், செகண்ட் லுக் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துவிட்டது. 
 
இந்நிலையில் தற்போது தர்பார் படத்தின் "சும்மா கிழி" என்ற பர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் நாளை 5 மணிக்கு வெளியாகும் என லைக்கா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் படத்தின் புதிய போஸ்டருடன் அறிவித்துள்ளனர்.  #சும்மாகிழி என்ற ஹேஸ்டேக்குடன், அந்த லிரிகள் வீடியோவில்  சில ஆச்சரியங்களைப் பாருங்கள்...நீங்கள் அனைவரும் எவ்வளவு உற்சாகமாக இருக்கிறீர்கள்? என கேட்டு ரசிகர்களுக்கு தர்பார் fevar வரவைத்துள்ளனர் படக்குழு. அனிருத்தின் இசையில் உருவாகியிருக்கும் இப்பாடலை கேட்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

மேலும், இந்த பாடல் இந்தி, தமிழ் , தெலுங்கு உள்ளிட்ட மூன்று மொழிகளில் வெளிவரவிருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

D54 போஸ்டர் தரமா இருக்கு!.. ஃபேன்ஸுக்கு பொங்கல் ட்ரீட் வைத்த தனுஷ்!...

உச்சநீதிமன்றத்தில் ‘ஜனநாயகன்’ படக்குழுவுக்கு பின்னடைவு.. இதை எதிர்பார்க்கவே இல்லையே..!

ஜனநாயகனை கைவிட்ட உச்சநீதிமன்றம்!.. பொங்கலுக்கு வெளியாவதில் சிக்கல்!...

சூர்யா ரசிகர்களுக்கு டபுள் அல்ல ட்ரிபிள் கொண்டாட்டம்.. மாஸ் தகவல்..!

மீண்டும் ரஜினி படத்தில் இணையும் விஜய் சேதுபதி.. அவரே உறுதி செய்த தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments