Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் பாணியை காப்பி அடிக்க சூர்யா முயற்சியா?

Webdunia
ஞாயிறு, 17 நவம்பர் 2019 (18:33 IST)
கடந்த சில ஆண்டுகளாக விஜய், தான் நடித்து வரும் படத்தில் ஒரே ஒரு பாடலை பாடி வருவது தெரிந்ததே. ஆரம்ப கட்டத்தில் அவர் பாடும் பாடலின் போது ’இந்த பாடலை பாடியவர் உங்கள் விஜய்’ என்ற டைட்டில் வருவதும் உண்டு 
 
இந்த நிலையில் சமீபகாலமாக அவர் பாடிய பாடல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக ’பிகில்’ படத்தில் அவர் பாடிய பாடல் மிகப்பெரிய ஹிட் என்பதும் அந்த பாடல் பட்டிதொட்டியெங்கும் மக்களைக் கவர்ந்தது என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் விஜய்யை அடுத்து நடிகர் சூர்யாவும் தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் ஒரு பாடலை பாட இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அதன் முதல் கட்டமாக தற்போது சூர்யா நடித்துவரும் ’சூரரைப்போற்று’ என்ற படத்தில் ஒரு பாடலை பாட இருப்பதாகவும் இதற்காக அந்த படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் ஹிப்ஹாப் பாடல் ஒன்றை கம்போஸ் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது 
 
சூர்யா பாடும் இந்த பாடலின் ஒலிப்பதிவு விரைவில் நடைபெறும் என்றும் இந்த பாடல் ஹிட்டானால் இனி விஜய் போலவே சூர்யாவும் தான் நடிக்கும் படங்களில் ஒரு பாடலை பாட தொடர்ந்து பாட முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது
 
ஏற்கனவே அஞ்சான் படத்திலும் ஒரு விளம்பரப் படத்திலும் சூர்யா பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ராஜமௌலி & மகேஷ் பாபு படத்தில் இணையும் ஹீரோயின் இவர்தானா?

விடுதலை 2 ஓடிடியில் ரிலீஸாகும் போது ஒரு மணிநேரம் கூடுதலாக இருக்கும்… வெற்றிமாறன் அப்டேட்!

55 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கிறேன்… வைரமுத்து பகிர்ந்த நாஸ்டால்ஜியா அனுபவம்!

ஆர் ஜே பாலாஜியின் சொர்க்கவாசல் ‘ஓடிடி’ ரிலீஸ் பற்றிய தகவல் வெளியானது!

செல்வராகவன் & ஜி வி பிரகாஷ் இணையும் படத்தின் ஷூட்டிங் பூஜையோடு தொடக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments