Webdunia - Bharat's app for daily news and videos

Install App

படக்குழுவினர் மீது கோபத்தில் இருக்கும் சம்ந்தா

படக்குழுவினர் மீது கோபத்தில் இருக்கும் சம்ந்தா

Webdunia
ஞாயிறு, 14 ஆகஸ்ட் 2016 (16:02 IST)
'ஜனதா கேரேஜ்' என்ற தெலுங்கு படத்தில் நடித்த சமந்தா அப்படத்தின் இசை வெளியீட்டு விழா விழாவை புறக்கணித்துள்ளார்.


 


உடல்நிலை சரியில்லை என சொல்லிவிட்ட சமந்தா அந்த நிகழ்ச்சியை தவிர்த்ததாக கூறப்படுகிறது. இருந்தாலும் சமந்தா அந்த இசை வெளியீட்டு விழாவிற்கு வராமல் போனதற்கு வேறு காரணம் சொல்கிறார்கள். இரண்டு நாட்களுக்கு முன்பு 'ஜனதா கேரேஜ்' படத்தின் டிரைலர் யு டியூபில் வெளியிடப்பட்டது.

2 நிமிடம் 20 வினாடிகள் ஓடும் டிரைலரில் சமந்தா சட்டென்று வந்து மறைந்து போகும் விதத்தில் சில வினாடிகள் மட்டுமே டிரைலரில் தெரிகிறார். படத்தின் முதல் நாயகியான அவருக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இரண்டாவது நாயகியான நித்யா மேனனுக்கு வசனக் காட்சி ஒன்றையும் டிரைலரில் வைத்துள்ளார்கள். அதனால்தான் சமந்தா கோபமடைந்து விழாவில் கலந்து கொள்ளவில்லை என்கிறார்கள்.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments