நயன்தாராவின் அடுத்த படம் டிராப்பா? அதிர்ச்சியில் விக்னேஷ் சிவன்

Webdunia
செவ்வாய், 24 டிசம்பர் 2019 (22:58 IST)
நயன்தாரா நடிப்பில் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் மிலிந்த் ராவ் என்பவர் இயக்க இருந்த நெற்றிக்கண் என்ற திரைப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்தப் படம் தற்போதைய நிலையில் டிராப் என்று கூறப்படுகிறது 
 
விக்னேஷ் சிவன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக இருந்த ஒரு படத்தை லைக்கா நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் திடீரென இந்த படத்தை போனிகபூர் தயாரிப்பதாகவும் கூறப்பட்டது ஆனால் தற்போது இரண்டு நிறுவனமும் தயாரிக்கவில்லை என்றும் இதனால் இந்த படத்தில் இருந்து கிடைக்க வேண்டிய தொகை விக்னேஷ் சிவனுக்கு கிடைக்கவில்லை என்பதால் அவர் தற்போது நெற்றிக்கண் படத்தை ட்ராப் செய்து விட்டதாகவும் கூறப்படுகிறது
 
மேலும் நெற்றிக்கண் திரைப்படத்திற்கு கொடுக்கப்பட்டிருந்த கால்சீட் முழுவதையும் நயன்தாரா தற்போது ’மூக்குத்தி அம்மன்’ படத்திற்கு கொடுத்து விட்டதாகவும் எனவே மீண்டும் நெற்றிக்கண் படம் தொடங்குவது என்பது சந்தேகமே என்றும் கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நேற்று ரம்யா, இன்று இந்த பெண் போட்டியாளரா? பிக்பாஸ் எலிமினேஷன் தகவல்..!

மலேசியாவில் அஜித்துடன் ஸ்ரீலீலா எடுத்து கொண்ட செல்பி: 'ஏகே 64' படத்துக்கான முன்னோட்டமா?

பி.யு.சின்னப்பாவுக்காக ரஜினி செய்த உதவி.. இது யாருக்கும் தெரியாதே

விஜய் கொடுத்த துப்பாக்கிதான் சுடுமா? திடீரென வைரலாகும் சரத்குமாரின் பதிவு

என்கிட்ட சாரி கேக்கணும்னு அவசியமே இல்ல.. ஜெயலலிதா பற்றி சிவக்குமார் பகிர்ந்த தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments