Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெலுங்கில் அப்படி… தமிழில் மட்டும் இப்படியா?

Webdunia
புதன், 26 ஏப்ரல் 2017 (17:24 IST)
தெலுங்கு சினிமா என்றாலே கவர்ச்சிக்குப் பஞ்சம் இருக்காது. தமிழில் இழுத்துப் போர்த்தி நடிக்கும் நடிகைகள், தெலுங்கு என்றால் இருப்பதை நழுவவிட்டு நடிப்பார்கள். கேட்டால், ‘அந்தக் கதைக்கு கவர்ச்சி தேவையாக இருந்தது’ என்று சொல்லி சமாளிப்பார்கள். மலையாள வாரிசு நடிகையும் அப்படித்தான் இருக்கிறார்.

 
 
சினிமாவுக்கு வந்த புதிதிலேயே கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டுவிட்டார் அந்த நடிகை. ‘தளபதி’யுடன் ஜோடி போட்டால் கேட்கவா வேண்டும்? எல்லா நடிகர்களும் தங்களுக்கு ஜோடியாக நடிக்க அவரை அணுகினர். அவரோ, வயதான நடிகர்களுக்கு ‘நோ’ சொல்லி, முன்னணி ஹீரோக்களுக்கு மட்டும் பச்சைக்கொடி காட்டினார். ‘கவர்ச்சி’  என்று இயக்குநர் சொன்னால், ‘நோ… நோ… நான் குடும்பக் குத்துவிளக்கு’ என்று காதைப் பொத்திக் கொள்கிறார். 
 
ஆனால், தமிழில் இருக்கும் அளவுக்கு தெலுங்கில் நடிகைக்கு மார்க்கெட் இல்லை. எனவே, மார்க்கெட்டைப் பிடிப்பதற்காக வயதான ஹீரோவுடன் ஜோடி சேர்ந்துள்ளார் நடிகை. இத்தனைக்கும் அந்தப் படத்தின் இன்னொரு ஹீரோயின் வேறு நடிக்கிறார்.  ‘கவர்ச்சி காட்ட நான் ரெடி’ என்று அறிக்கை விட்டும் தெலுங்கு வாய்ப்புகளைக் குறிவைக்கிறார் நடிகை என்கிறார்கள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வைரலான ‘கண்ணாடிப் பூவே’ பாடல்.. ரெட்ரோ செகண்ட் சிங்கிள் பாடல் எப்போது?

வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் & ஆண்ட்ரியா நடிக்கும் ‘மாஸ்க்’… முதல் லுக் போஸ்டர் ரிலீஸ் அப்டேட்!

தமிழக மக்கள்தான் என்னை நடிகையாக ஏற்றுக்கொண்டார்கள்… ஜோதிகா நெகிழ்ச்சி!

இதெல்லாம் ஒரு படமா?... மக்கள் உன் மீதுதான் கோபத்தில் இருக்கிறார்கள் – தனுஷை விமர்சித்த ராஜன்!

கவிதை எழுத A I பயன்படுத்தினேன்.. அதிருப்தியை வெளியிட்ட வைரமுத்து!

அடுத்த கட்டுரையில்