Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய், சூர்யாவை அலறவிடும் நடிகை

Webdunia
திங்கள், 17 ஏப்ரல் 2017 (15:24 IST)
‘என்னோட லைலா வராளே ஒயிலா’ என்று விஜய்யுடனும், ‘முன்பே வா என் அன்பே வா…’ என சூர்யாவுடனும் ஜோடி போட்டவர் இந்த நடிகை. ‘விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்கு’ என்ற பழமொழிக்கேற்ப, ஹீரோயினாக சில காலம் நடித்தவர், கல்யாணம் பண்ணிக்கொண்டு செட்டிலானார்.
 

 

ஆடிய காலும், பாடிய வாயும் சும்மா இருக்குமா? தினமும் ‘ஆக்ஷன்’, ‘கட்’ என்று இரண்டு, மூன்று தடவையாவது கேட்டால்தான் அம்மணிக்கு தூக்கமே வருகிறதாம். கல்யாணம் ஆன ஹீரோயினும், முத்துன கத்தரிக்காயும் சினிமாக்காரங்களுக்கு ஒண்ணுதானே? அதன்படி, ஹிந்தியில் வெளியான கிரிக்கெட் வீரரின் படத்தில், அவருக்கு அக்காவாக நடித்திருந்தார்.

தமிழிலும் அதுபோன்ற வேடங்களில் நடிக்க ஆசை இருக்கிறதாம் நடிகைக்கு. அதனால், தன்னுடன் நடித்த நடிகர்களுக்கு போனைப் போட்டு, ‘உங்களுக்கு அக்கா, அண்ணியா நடிக்கக் கூட நான் ரெடி’ என்று பழைய பாசத்தை நினைவுபடுத்துகிறாராம். இதனால், விஜய், சூர்யா போன்ற நடிகர்கள் அவருடைய போனைக் கண்டாலே மொபைலை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிடுகிறார்களாம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பார்பி டால் போல மின்னும் தமன்னா… அழகிய புகைப்பட தொகுப்பு!

ஸ்டன்னிங்கான உடையில் பூஜா ஹெக்டேவின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சூர்யா 45 படத்தில் இணைந்த லப்பர் பந்து படக் கதாநாயகி!

நான் பிற மொழிப் பாடல்களில் இருந்து காப்பியடிக்கக் காரணமே அவர்கள்தான்… ரகசியம் பகிர்ந்த தேவா!

முதல் 2 நாட்களில் 20 கோடி ரூபாய் வசூல்.. ஜப்பானைக் குறிவைக்கும் மகாராஜா!

அடுத்த கட்டுரையில்
Show comments