Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜியோ புகாரின் விளைவு!! ஏர்டெல், வோடோபோன், ஐடியாவிற்கு ரூ.3050 கோடி அபராதம்

Webdunia
சனி, 22 அக்டோபர் 2016 (12:40 IST)
ஏர்டெல், வோடோபோன் மற்றும் ஐடியா ஆகிய தொலை தொடர்பு நிறுவனங்கள் ஜியோவில் இருந்து அழைக்கப்படும் கால்களுக்கு, சரிவர இணைப்பு கொடுக்காதலால் ரூ.3050 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

 
தொலை தொடர்பு நிறுவனங்கள் ஜியோவில் இருந்து அழைக்கப்படும் கால்களுக்கு, சரிவர இணைப்பு கொடுக்காதலால், அதிகமான 'கால் ட்ராப்'-ஐ சந்தித்தது ஜியோ. இந்த விவகாரத்தை ஜியோ நிறுவனம், தொலைதொடர்பு ஒழுங்காற்று ஆணையமான ட்ராயிடம் எடுத்துச் சென்றது. 
 
புகாரை விசாரித்த ட்ராய், இம்மூன்று நிறுவனங்களும் வேண்டுமென்றே, ஜியோ சிம்மில் இருந்து அழைக்கப்படும் கால்களுக்கு சரிவர இணைப்பு கொடுக்கவில்லை என்பதை உறுதி செய்தது.
 
எனவே, ஏர்டெல், வோடஃபோன் ஆகிய நிறுவனங்களுக்கு ரூ.1050 கோடியும், ஐடியா நிறுவனத்துக்கு ரூ.950 கோடியும் அபராதம் விதிக்கப்பட வேண்டுமென்று சிபாரிசு செய்துள்ளது. 
 
பொதுவாக இதுபோல், முறைகேடுகளில் ஈடுபடும் நிறுவனங்களின் லைசென்சு ரத்து செய்யப்படும். அப்படி செய்தால் அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், அபராதத்துடன் முடித்துக் கொண்டது ட்ராய்.

வாக்குப்பெட்டி வைக்கப்பட்டுள்ள கல்லூரியில் ரெய்டு.. நாமக்கல்லில் பரபரப்பு..!

மக்களே உஷார்... 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா.?

இந்தியாவில் வெப்ப அலையால் ஆண்டுக்கு 30 ஆயிரம் பேர் பலி..! உலகம் முழுவதும் எத்தனை பேர் தெரியுமா.?

அடுத்த பிரதமராக அமித்ஷாவை கொண்டுவர பிரதமர் மோடி முடிவு.! அரவிந்த் கெஜ்ரிவால்.!!

பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட்ட காமெடி நடிகரின் வேட்புமனு நிராகரிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments