Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரூ.999 -க்கு ஸ்மார்ட் ஃபோன் ரிலையன்ஸ், டேட்டா வைண்ட் நிறுவனம் சேர்ந்து அறிமுகம்

ரூ.999 -க்கு ஸ்மார்ட் ஃபோன் ரிலையன்ஸ், டேட்டா வைண்ட் நிறுவனம் சேர்ந்து அறிமுகம்
, புதன், 28 அக்டோபர் 2015 (12:03 IST)
அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனமும், கனடாவின் பிரபல மொபைல் நிறுவனமான டேட்டா வைண்ட் நிறுவனமும் இணைந்து ரூ.999க்கு ஸ்மார்ட் ஃபோன் விற்பனை செய்ய உள்ளது.
 
வருகிற டிசம்பர் மாதம் இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் இந்த ஸ்மார்ட் ஃபோன் உலகிலேயே விலை குறைந்த ஸ்மார்ட் ஃபோன் ஆகும். ரிலையன்ஸ் நிறுவனம் வழங்கும் ஆஃபர்களுடன் வெளிவரும் இந்த ஸ்மார்ட் ஃபோன் லினக்ஸ் ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும்.
 
ரூ.999 தான் என்று இது மற்ற ஸ்மார்ட் ஃபோன்கள் போல் இருக்காது என நினைக்க வேண்டாம், மற்ற ஸ்மார்ட் ஃபோன்களை போலவே இதிலும் பேஸ்புக், வாட்ஸ்ஆப், இமெயில் வசதிகள் உள்ளன. மேலும் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்ஆப் முதல் ஓர் ஆண்டுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.
 
2 ஜி நெட்வொர்க் மட்டுமே இந்த ஸ்மார்ட் ஃபோனில் சப்போர்ட் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. பிராசசர்களின் விலை சரிந்து வரும் நிலையில், இவ்வளவு குறைந்த விலையில் ஸ்மார்ட்போனை வழங்குவது சாத்தியம்தான் என டேட்டா வைண்ட் தெரிவித்துள்ளது.
 
இந்த ஸ்மார்ட் ஃபோன்கள் டிசம்பர் 28 ஆம் தேதி ரிலையன்ஸ் நிறுவனர் திருபாய் அம்பானியின் பிறந்த நாள் அன்று இந்தியாவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இது குறித்து ரிலையன்ஸ் நிறுவனம் இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கவில்லை, டேட்டா வைண்ட் நிறுவனம் தான் இந்த ஸ்மார்ட் ஃபோன் பற்றிய தகவலை வெளியிட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil