Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அட்டகாசமான சிறப்பம்சங்கள்.. பட்ஜெட் விலை! – இந்தியாவில் அறிமுகமானது Realme P1 5G Series!

Prasanth Karthick
திங்கள், 15 ஏப்ரல் 2024 (16:43 IST)
இந்தியாவில் பட்ஜெட் விலை 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கு வரவேற்பு உள்ள நிலையில் ரியல்மி நிறுவனம் தனது புதிய Realme P1 5G Seriesஐ இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.



பொதுவாகவே பட்ஜெட் விலையில் தரமான சிறப்பம்சங்களை வழங்கும் ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் ரியல்மி நிறுவனமும் ஒன்று. நல்ல கேமரா வசதியுடன், சிறந்த பெர்பார்மென்ஸ் கொண்ட புதிய Realme P1 5G Series ஸ்மார்ட்போன்களை தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இன்று முதல் இதன் முன்பதிவு தொடங்குகிறது. Realme P1 5G மற்றும் Realme P1 5G Pro ஆகிய இரண்டு வேரியண்ட்களின் சிறப்பம்சங்கள் குறித்து பார்ப்போம்.

Realme P1 5G ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:
  • 6.7 இன்ச் புல் ஹெச்டி+ அமொலெட் டிஸ்ப்ளே
  • மீடியாடெக் டைமென்சிட்டி 7050 ப்ராசஸர்
  • ஆண்ட்ராய்டு 14 OS
  • 6 ஜிபி / 8 ஜிபி RAM
  • 128 GB / 256 GB இண்டெர்னல் மெமரி
  • 2 டிபி மெமரி கார்டு சப்போர்டிங் ஸ்லாட் உள்ளது
  • 50 MP + 2 MP ப்ரைமரி டூவல் கேமரா
  • எல்.இ.டி ப்ளாஷ் லைட்
  • 16 MP முன்பக்க செல்பி கேமரா
  • 5000 mAh பேட்டரி, 45W SUPERVOOC சார்ஜிங், ரிவர்ஸ் சார்ஜிங்

இந்த Realme P1 5G ஸ்மார்ட்போன் 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ.15,999 ஆகவும், 8 ஜிபி + 128 ஜிபி மாடல் ரூ.18,999 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Realme P1 Pro 5G ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:
  • 6.7 இன்ச் புல் ஹெச்டி+ அமொலெட் டிஸ்ப்ளே
  • குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 6 ஜென் 1, அட்ரினோ 710 ஜிபியு
  • ஆண்ட்ராய்டு 14 OS
  • 8 ஜிபி RAM
  • 128 GB / 256 GB இண்டெர்னல் மெமரி
  • 2 டிபி மெமரி கார்டு சப்போர்டிங் ஸ்லாட் உள்ளது
  • 50 MP + 8 MP + 2 MP ப்ரைமரி ட்ரிப்பிள் கேமரா
  • எல்.இ.டி ப்ளாஷ் லைட்
  • 16 MP முன்பக்க செல்பி கேமரா
  • 5000 mAh பேட்டரி, 45W SUPERVOOC சார்ஜிங், ரிவர்ஸ் சார்ஜிங்

இந்த Realme P1 5G ஸ்மார்ட்போன் 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ.21,999 ஆகவும், 8 ஜிபி + 256 ஜிபி மாடல் ரூ.22,999 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்: முககவசம் அணிய அறிவுறுத்தல்..!

ஆட்சியில் இருக்கிறோம் என்ற ஆணவம் வேண்டாம்..! - முதல்வருக்கு தமிழிசை கண்டனம்

6 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்: வானிலை எச்சரிக்கை..!

வீடு தொடங்கி வீதி வரை பெண்கள் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது: கனிமொழி எம்பி..

ராமதாசுக்கு வேலையில்லையா? ஸ்டாலின் அதிகார அகம்பாவத்தை காட்டுகிறது: அன்புமணி

அடுத்த கட்டுரையில்
Show comments