Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எங்கெல்லாம் கொரோனா வைரஸ் பரவுகிறது? கண்டறிய பிரத்யேக செயலி!

Webdunia
புதன், 26 பிப்ரவரி 2020 (11:15 IST)
உலகமெங்கும் பல நாடுகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் எந்தெந்த பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது என்பதை தெரிந்து கொள்வதற்காக செயலிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த சில மாதங்களில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் சீனாவில் மட்டும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோரை பலிக் கொண்டுள்ளது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், சீனாவில் மட்டுமல்லாமல் தென் கொரியா, ஈரான் உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா வைரஸால் பலிகள் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்கள் வாழும் பகுதிகளை கணக்கிட்டு எந்தெந்த பகுதிகளில் கொரோனா தாக்கம் அதிகமாக இருக்கிறது என்பதை அனைத்து மக்களும் தெரிந்து கொள்ள புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இந்த செயலி மூலம் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமுள்ள பகுதிகளை மக்கள் அறிந்துகொண்டு அந்த பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்கலாம் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்வியிலும் விளையாட்டிலும் வெற்றி பெறுங்கள்: சென்னை கால்பந்து போட்டி குறித்து முதல்வர்..!

கள்ளநோட்டு அடித்த விசிக பொருளாளர்.. தலைமறைவானவருக்கு போலீஸ் வலைவீச்சு..!

பாசமுள்ள மனிதரப்பா.. மீசை வெச்ச குழந்தையப்பா..! ட்ரெண்டிங்கில் இணைந்த எடப்பாடியார்!

எங்ககிட்டயும் ஏவுகணைகள் இருக்கு.. போட்டு பாத்துடுவோம்! - அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை!

பள்ளி மாணவர்களுக்கு உண்டியல்.. சேமித்த பணத்தை புத்தகம் வாங்க அறிவுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments