ஒழுங்காக 20 வினாடி கையை கழுவுங்க! – டூடுல் வெளியிட்ட கூகிள்!

Webdunia
வெள்ளி, 20 மார்ச் 2020 (10:36 IST)
கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக கையை கழுவுவதால் ஏற்படும் பயன்கள் குறித்து பேசியவரின் டூடுலை கூகிள் வெளியிட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வரும் நிலையில் முக்கியமாக அனைத்து மருத்துவ நிபுணர்களும் குறிப்பிடும் விஷயம் கைகளை கழுவுதல். ஆல்கஹால் உள்ள கைக்கழுவும் திரவத்தால் கையை 20 வினாடிகள் கழுவுவதன் மூலம் கொரோனா தொற்று ஏற்படுவதை கட்டுப்படுத்தலாம் என உலக சுகாதார நிறுவனமும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

அல்கஹால் கலந்த சோப்புகளை பயன்படுத்தி கைகளை கழுவுவதால் பாக்டீரியா தொற்றுகளிலிருந்து காக்கலாம் என்பதையும், மேலும் பல்வேறு பயன்களையும் உலகுக்கு சொன்னவர் ஹங்கேரியை சேர்ந்த டாக்டர் இங்ஙாஸ் செம்மல்வெய்ஸ். அவரது உருவத்துடன் வெளியாகியுள்ள கூகிள் டூடுல் 20 வினாடிகள் கையை கழுவ வலியுறுத்துவதாக உள்ளது.

கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் கூகிளின் இந்த முயற்சியை பலரும் வரவேற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சேலம் தவெக கூட்டத்திற்கு ஒரு வழியா அனுமதி கிடைச்சாச்சு.. ஆனால் நிபந்தனைகள் என்னென்ன?

ஓடும் ரயிலில் திடீர் தீ விபத்து.. பயணிகளுக்கு என்ன ஆச்சு? பரபரப்பு தகவல்..!

காதலியுடன் மகனை கண்ட தாய்.. மெட்ரோ ரயில் நிலையத்திலேயே நிச்சயதார்த்தம்..!

மூன்று சிறுமிகள் தற்கொலை வழக்கில் திடுக்கிடும் திருப்பம்.. தந்தையே மறைமுக காரணமா?

விஜய் கட்சி 200 தொகுதிகளில் ஜெயிக்கும்.. அல்லது பூஜ்யம் ஆகும்.. ஒரு வித்தியாசமான கணிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments