Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் பணி நீக்கத்தை தொடங்கிய கூகுள்... நியூஸ் பிரிவிலிருந்து 45 பேர் பணி நீக்கம்!

Webdunia
வியாழன், 19 அக்டோபர் 2023 (12:24 IST)
இந்த ஆண்டின் தொடக்கத்தின் முதலே பல பெரிய நிறுவனங்கள் ஆட்குறைப்பு வேலைகளை செய்து வருகின்றன. பெரும்பாலும் பொருளாதார சூழ்நிலைகளை காரணம் காட்டி இந்த பணி நீக்கம் நடைபெற்று வருகின்றன. உலகின் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றான கூகுளும் ஏற்கனவே 10000 பேர் வரை இந்த ஆண்டில் பணி நீக்கம் செய்துள்ளது.

தற்போது மீண்டும் கூகுள் 40 முதல் 45 பேரை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் அனைவரும் கூகுள் நியூஸ் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

வர்த்தகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தக் காரணங்களுக்காக மிகக் குறைந்த அளவில் இந்த பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இன்னும் நூற்றுக்கனக்கானோர் கூகுள் நியூஸ் பணிபுரிந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஆனால் இந்த பணி நீக்கத்திற்கு செயற்கை நுண்ணறிவு பயன்பாடு அதிகரித்ததும் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. சமீப காலமாக கூகுள் நியூஸ் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த நிலையில் இந்த பணி நீக்கம் நடந்துள்ளது.

பொருளாதார மந்த நிலை, செயற்கை நுண்ணறிவு பயன்பாடு என பல்வேறு காரணங்களால் பெரிய நிறுவனங்கள் ஆட்குறைப்பு வேலைகளை தொடர்ந்து செய்து வருவது குறிப்பிடத்தக்கது.<>

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமைதியின் நாயகனே..! பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு நோபல் பரிசு? பரிந்துரைத்தது யார்?

கேஸ் சிலிண்டர் விலை ரூ.43.50 குறைப்பு.. இந்த மாத கேஸ் விலை நிலவரம்!

என் முதலாளி ஒரு பொய்ப்புழுகி..! எலான் மஸ்க் பற்றி குறை சொன்ன Grok AI!

சுற்றுலா சீசன் வந்தாச்சு.. குழந்தைகளுக்கு சுற்றுலாவை மேலும் சுவாரஸ்யமாக்க சில Activities!

லண்டன் செல்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.. முக்கிய வர்த்தக பேச்சுவார்த்தை..!

அடுத்த கட்டுரையில்
Show comments