Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குறைந்த எடையுள்ள ஆடியின் புதிய கியூ-7 கார் அறிமுகம்

Webdunia
சனி, 12 டிசம்பர் 2015 (20:54 IST)
ஜெர்மனியைச் சேர்ந்த சொகுசுக் கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி புதிதாக கியூ-7 எனும் அதிநவீன மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த கார் எஸ்.யு.வி. ரகத்தைச் சேர்ந்து.


 


இந்த கார் குறித்து "ஆடி' இந்தியா நிறுவனத்தின் தலைவர் ஜோ கிங் கூறியிருப்பதாவது: குறைந்த எடையுள்ள விதத்தில் கியூ-7 மாடல் உருவாக்கப்பட்டுள்ளது. முந்தைய மாடல்களைவிட இது சுமார் 325 கிலோ எடை குறைவு. இதன் அதிநவீன தொழில்நுட்பம், காரின் திறனை அதிகரிக்கச் செய்கிறது.

மேலும், குறைந்த எரிபொருள் செலவாக, ஒரு லிட்டர் எரிபொருளுக்கு 14.75 கி.மீ. மைலேஜ் அளிக்கக் கூடியது. 245 குதிரைத் திறன் கொண்ட இந்தக் காரின் என்ஜின், மணிக்கு 100 கி.மீ. வேகத்தை 6.3 வினாடிகளில் அடைய முடியும் என்று அவர் தெரிவித்தார்.

 டெல்லி மார்க்கெட்டில் இந்த காரின் விலை தற்போது ரூ. 77.5 லட்சமாக நிர்னயிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

Show comments